தமிழக டிஜிபி பதவிக்கான ரேஸில் 6 பேர்? மகேஷ்குமார் அகர்வாலை டிக் செய்ய போகிறாரா விஜய்?
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கான ரேஸில் மொத்தம் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் நிர்வாக ரீதியில் பல்வேறு அதிரடிகளை பிறப்பித்து வருகிறார். முதல்வருக்கான தனிச் செயலாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.

அந்த வகையில் வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் உளவுத் துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தேர்தல் நேரத்தில் உளவுத் துறை ஐஜியாக அவினாஷ் குமாரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்த நிலையில் தற்போது புதிய மாற்றம் நடந்துள்ளது. அது போல் கடந்த அரசால் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்த வெங்கட்ரமணனை தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் மாற்றி, அவருக்கு பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட டிஜிபியையும் மாற்றி புதியவரை கொண்டு வர விஜய் அரசு ஆலோசனை செய்துள்ளதாம். அந்த வகையில் தமிழக டிஜிபி ரேஸில் 6 பேர் இடம்பெற்றிருக்கிறார்களாம்.
அவர்கள் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ரமணன், வினித் தேவ் வாங்கடே ஆகியோர் ஆவர். இந்த 6 பேரில் ராஜீவ் குமார், ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ரமணன் ஆகியோர் அதிக அளவில் முன்னணியில் இருக்கிறார்களாம். இவர்களில் ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்படுவர் என சொல்லப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரிகளின் லட்சியப்பதவியான தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. அவர் யார் என்பதை பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். இவர் 22 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தார். 1994 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ 5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இவர் தலைமையிலான சிபிசிஐடிதான் கொள்ளையர்களை கைது செய்தது.
இவர் தேனி மாவட்ட எஸ்பி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை ஆணையர், போக்குவரத்து பிரிவு துணை ஆணையர், சிபிஐ அதிகாரி, சிபிசிஐடி ஐஜி, மதுரை ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், டிஜிபி அலுவலகத்தில் செயலாக்க பிரிவு ஏடிஜிபி, கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி, சென்னை காவல் துறை ஆணையர், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை மகேஷ் குமார் வகித்துள்ளார்.
தமிழக காவல்துறையின் உயரிய பதவியான காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police), மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறார். ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த காவல் நிர்வாகமும் இவரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும்.
தமிழக டிஜிபியின் முக்கிய பொறுப்புகள் பின்வருமாறு:
1. சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு
மாநிலம் முழுவதும் அமைதியைப் பேணுவது டிஜிபியின் முதன்மைப் பொறுப்பாகும். போராட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் விவிஐபி (VVIP) வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர் மேற்பார்வையிடுகிறார். ஏதேனும் ஒரு பகுதியில் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதைத் தணிக்கத் தேவையான கூடுதல் படைகளை (எ.கா. TSP - தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) அனுப்பும் அதிகாரம் இவருக்கு உண்டு.
2. நிர்வாகக் கட்டுப்பாடு
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் பிரிவுகளையும் (சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உளவுத்துறை போன்றவை) இவர் வழிநடத்துகிறார்.
காவல்துறையினரின் இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.
ஆயுதப் படைகள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்.
3. கொள்கை உருவாக்கம் மற்றும் ஆலோசனை
முதலமைச்சர் மற்றும் உள்துறைச் செயலாளருக்குக் காவல் துறை சார்ந்த விவகாரங்களில் நேரடி ஆலோசகராகச் செயல்படுகிறார்.
மாநிலத்தில் குற்றங்களைத் தடுக்க புதிய திட்டங்களை வகுப்பது.
காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நவீனமயமாக்கல் (Modernization of Police Force) குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவது.
4. குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வு
பெரிய அளவிலான குற்றச்சம்பவங்கள், பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்த இவர் உத்தரவிடுகிறார். மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் (SCRB) மூலம் குற்றப் புள்ளிவிவரங்களைக் கண்காணித்து, குற்றங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறார்.
5. பொதுமக்களுடனான தொடர்பு
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த இவர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறார். 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அல்லது சமூகக் காவல் திட்டங்கள் மற்றும் காவல் துறையின் மீதான மக்களின் புகார்களை விசாரிக்கும் அமைப்புகளை இவர் மேற்பார்வையிடுகிறார்.
டிஜிபி அலுவலகத்தின் கீழ் உள்ள முக்கியப் பிரிவுகள்:
ஒரு டிஜிபி நேரடியாக அல்லது கூடுதல் டிஜிபி-க்கள் (ADGP) மூலம் கீழ்க்கண்ட பிரிவுகளை நிர்வகிக்கிறார்:
உளவுத்துறை (Intelligence): மாநிலப் பாதுகாப்பு குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரித்தல்.
சிபி-சிஐடி (CB-CID): சிக்கலான வழக்குகளை விசாரிக்கும் பிரிவு.
கடலோரப் பாதுகாப்பு (Coastal Security Group): தமிழகத்தின் நீண்ட கடற்கரைப் பகுதியை பாதுகாத்தல்.
போக்குவரத்து (Traffic): சாலை விதிகள் மற்றும் விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்.
தமிழக டிஜிபி, மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் (Fort St. George) அல்லது மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் (Police Headquarters) இருந்து தனது பணிகளை மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications