ரஜினிக்கு பக்கத்திலேயே நிற்கிறாரே.. அவர்தான் முதல்வர் வேட்பாளராமே.. பரபரக்கும் தகவல்..!
ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: ரஜினி ஆரம்பிக்க போகும், புது கட்சி குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், யூகங்கள், நித்தம் பல ரூபங்களில் வெளிவந்தபடியே உள்ளன.. அப்படித்தான் தற்போது அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற ஒரு கணிப்பும் கசிந்து வருகிறது.
"தனியாக கட்சி ஆரம்பித்தாலும், முதல்வர் பதவியில் உட்கார மாட்டேன், அந்த பதவி மீது விருப்பம் இல்லை" என்று ரஜினி தெளிவுபடுத்தி உள்ளார்.. ஆனால், "முதல்வராக நீங்கள்தான் வர வேண்டும்" என்று ரஜினியிடமே பலமுறை அன்புடன் வலியுறுத்தி வருபவர் தமிழருவி மணியன்.
கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்ட தமிழருவி மணியன், அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளார்... அதனால், ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளதோடு புதிய பொறுப்புகளும் அவருக்காக வெயிட்டிங்கில் உள்ளதாக தெரிகிறது.

வேட்பாளர்
இந்நிலையில், ரஜினி விரைவில் கட்சி ஆரம்பிக்க போவதால், அதன் பெயர் என்னவாக இருக்கும்? முக்கியமாக சின்னம் எப்படி இருக்கும்? கட்சியின் கொடி எப்படி இருக்கும்? என்ற ஆர்வங்களும், விவாதங்களும் எழுந்தபடியே உள்ளன... அதேபோல, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.. ஏற்கனவே தமிழருவி மணியனை போன்றே, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை ரஜினிகாந்த் நியமித்துள்ளார்.

அதிருப்தி
இதற்கே ரஜினி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துவிட்டதாக தகவல்கள் கசிந்தன.. இத்தனை வருஷம் நாங்கள் காத்து கிடக்கும்போது, திடீரென மன்ற நிர்வாகிகளை விட்டுவிட்டு, வேறு ஒருவருக்கு பொறுப்பு தந்தது விமர்சனத்துக்கும் உள்ளானது. அதனால், முதல்வர் வேட்பாளராவது யாராக இருக்கும் என்பதே அந்த எதிர்பார்ப்பு.

அறிவிப்பு
ஆனால், கட்சி சம்பந்தமாக அப்படி யாரையும் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும் ஒருவர் பெயர் அடிபட்டு வருகிறது.. அவர்தான் தமிழருவி மணியன்.. அநேகமாக தமிழருவி மணியனையே வேட்பாளராக அறிவிக்ககூடும் என்கிறார்கள்.. இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது, அது பொதுச்செயலாளராக அர்ஜுன மூர்த்தியை நியமிக்கலாம் என்ற பேச்சும் உள்ளது.. இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.

ரசிகர்கள்
ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில், நிச்சயம் ரஜினி கட்சிக்கு மைனஸாகவே அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. காரணம், இத்தனை வருடம் காத்து கிடந்த ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி தந்தால், ரஜினியின் பெயர் மேலும் சிறப்படையும்.. ரசிகர்களும் திறன்பட வேலை பார்ப்பார்கள்.. அதைவிட்டுவிட்டு, கட்சியை வளர்க்க மட்டும் ரசிகர்கள், மற்றபடி பதவிகளை அனுபவிப்பது வேறொருவர் என்பது அந்த கட்சிக்கு சறுக்கல்தான் என்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications