"சர்ப்ரைஸ்" தர போறார் ஸ்டாலின்.. வரும் 4-ம்தேதி அறிவிக்கிறார்.. திமுகவினர் குஷி.. பிஸியில் அறிவாலயம்
வருகிற 4ம் தேதி மேயர் தேர்தல் ஸ்டாலின் முன்னிலையில் நடக்க உள்ளது
சென்னை: தேர்தல் வெற்றியை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி விட்டார்.. இதனால் அறிவாலயமே பரபரப்பாக காணப்படுகிறது.
தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுவரை 2 பெண்கள் சென்னை மேயர் பதவியை அலங்கரித்துள்ளனர். 1957ம் ஆண்டு தாரா செரியன் என்பவர் சென்னை மாநகரின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் பெண் மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அதிமுக கோட்டை
இந்நிலையில், நேற்றைய தினம் தேர்தலுக்கான ரிசல்ட் வெளிவந்து திமுக அபார வெற்றியை பிடித்தது.. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பல்வேறு இடங்களையும் தன்வசப்படுத்தியது.. அத்துடன் அதிமுகவை படுதோல்வி அடையவும் செய்தது.. இது திமுகவின் மிக மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது.. திமுக தொண்டர்கள் படுகுஷியில் இருக்கிறார்கள்.

கொங்கு மண்டல பொறுப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, குறைந்த அளவு வித்தியாசத்திலேயே ஆட்சியை பிடித்திருந்தது.. அதேசமயம், கொங்குவில் குறைந்தபட்சம் 20 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கமும் முக ஸ்டாலினுக்கு இருக்கவே செய்தது.. அதனால்தான், இந்த முறை கொங்கு பகுதியில் பிரத்யேகமாக கவனம் செலுத்தினார். முக்கிய அமைச்சரை அங்கு நியமித்து பொறுப்பையும் ஒப்படைத்தார்.

கொங்கு
இப்போது அதிக அளவு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றதுடன், கொங்குவையும் வென்றெடுத்த மகிழ்ச்சியில் திமுக உள்ளது.. இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மார்ச் 4ம் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்.. அதற்கு முன்னதாக, உள்ளாட்சியில் வெற்றிப்பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலினை சந்திக்கவிருக்கிறார்கள்.

அமைச்சர்கள் சிபாரிசு
மார்ச் 4-ந்தேதி நடக்கவிருக்கும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் குறித்து அமைச்சர்களிடம் மா.செ.க்களிடமும் விவாதிக்கவிருக்கிறார் ஸ்டாலின்... இந்த மறைமுக தேர்தலில், மேயர் மற்றும் தலைவர்களாக யாரை தேர்வு செய்வது என்கிற ஆலோசனைகளை ஸ்டாலின் இப்போதே துவக்கி விட்டாராம்.. இந்த பதவிகளை கைப்பற்ற ஜாம்பவான்கள் பலரும் பல லாபிகள் மூலம் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்பதே திமுகவில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது... இதனால் அறிவாலயம் ஏக பரபரப்பில் இருக்கிறது.

எதிர்பார்ப்பு
இதில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால், சில திமுக அமைச்சர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது.. இதில் சீனியர் அமைச்சர்களும் தங்களுக்கு ஆதரவான வெற்றி பெற்றவர்களின் பெயரை முதல்வரிடம் சொல்லி வருகிறார்கள்.. இதுபோக, மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் போன்றோரும் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து முதல்வரிடம் காய் நகர்த்தி வருகிறார்கள்.. இதனால் கட்சிக்குள் நிர்வாகிகளிடையே மறைமுக ஈகோ போட்டிகளும் எழுந்து வருகின்றன.
Recommended Video

ஆலோசனை
இதைதவிர, மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து மாவட்ட வாரியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டபிறகு, அந்த லிஸ்ட்டை அனுப்பியவுடன், வேட்பாளர்களை இறுதிசெய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது..
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
திமுக VS அதிமுக.. சென்னையில் 11 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்










Click it and Unblock the Notifications