ஆளுநர் ரவியின் பதவிக்காலம் ஓவர்.. அடுத்த கவர்னர் அவரா? லிஸ்ட் எடுத்த அமித் ஷா.. உள்துறை முக்கிய மூவ்
சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிகிறது. அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்என் ரவி தமிழக ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை, ஐபி அதிகாரி ஆவார். ஆர். என் ரவி ஆகஸ்ட் 1, 2019 முதல் 9 செப்டம்பர் 2021 வரை நாகாலாந்தின் ஆளுநராகவும், மேகாலயா ஆளுநராக 18 டிசம்பர் 2019 முதல் 26 ஜனவரி 2020 வரையிலும் பணியாற்றினார்.

அவர் 1976 இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார் மற்றும் கேரளா கேடருக்கு ஒதுக்கப்பட்டார், அங்கு அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றினார். அதன்பின் பாஜக ஆட்சியில் ஆளுநர் ஆன இவர் 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாடு ஆளுநராக இருக்கிறார்.
சர்ச்சை மேல் சர்ச்சை: தற்போது ஆளுநராக உள்ள ரவி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். உதாரணமாக ஏப்ரல் 2022 இல் உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி ஏ.ஜி. பேரறிவாளனின் மன்னிப்பு மனுவை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்த ரவியின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கியது, அத்தகைய நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் வேர்களை அழிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளை.. மாநில முதல்வர் சொல்வதை வழிமொழிவதே ஆளுநரின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தது.
அதேபோல் ஜனவரி 2023 இல், "தமிழகம்" என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும் என்று ரவி பரிந்துரைத்தார், மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆளும் அரசியல் கட்சிகள் பிற்போக்குத்தனமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ரவியின் கருத்துக்கு திமுக, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சிபிஐ(எம்) ஆகிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின் ஆளுநர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கிக்கொண்டார்.
அதேபோல் ஜனவரி 9, 2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது, ரவி தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட உரையில் இருந்த முக்கியமான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பேசினார். பெண்கள் அதிகாரம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, கருணை மற்றும் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பெரியார் உள்ளிட்ட திராவிடத் தலைவர்கள் பற்றிய பகுதிகள் போன்ற சொற்களைத் தவிர்த்துவிட்டார். அரசு மூலம் . தயாரிக்கப்பட்ட உரைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. அதை அவர் மீறிய நிலையில் அவரின் பேச்சை முதல்வர் ஸ்டாலின் சபாநாயகர் மூலம் நீக்கினார்.
பதவி முடிகிறது: இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிகிறது. அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜூலை மாதம் அவரின் பதவிக்காலம் முடியும். இந்த நிலையில் அவரை ஆளுநராக நீடிக்க வைக்கலாமா? மத்தியில் பெரிய பொறுப்பு கொடுக்கலாமா? அல்லது புதிய ஆளுநராக தமிழ்நாட்டிற்கு வேறு ஒரு பாஜக தலையை கொண்டு வரலாமா என்று ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறதாம்.
இதற்கான ஆலோசனைகளை, லிஸ்டுகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications