இது ஒன்றுதான் இப்போ பெரிய கேள்வி.. உதயநிதி உடனே இருக்க போகும் "மாஸ்டர்மைண்ட்" யார்? ஸ்டாலின் சாய்ஸ்?
சென்னை: நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். ஒரு பக்கம் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.,. இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை.

அதிகாரி யார்?: உதயநிதி துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயலாளர் பதவியை பிடிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியாக இருக்கும் பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும். மாநில அமைச்சர்கள் குழுவின் சீனியாரிட்டியில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி ஆகும் இது.
உதயநிதி துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
யார் அந்த ஐஏஎஸ்?: குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸராக இருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சிபாரிசை கேட்டு நெருங்கி வருகின்றனர். ஆனால், உதயநிதியோ வேறு சிலரின் ஆலோசனையைக் கேட்டு தனக்கான செயலாளர்களை முடிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம். முக்கியமான ஐஏஎஸ் ஒருவரின் பெயரும் இதில் உள்ளதாம். அதேபோல, அவருக்கான தனி உதவியாளர்கள் பதவியை கைப்பற்ற, ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளும் கிச்சன் கேபினெட்டை அணுகி வருகிறார்கள்.
இந்த நிலையில், அரசியல் பி.ஏ. ஒருவரை உதயநிதி நியமித்துக்கொள்ள முடியும். அவர் அரசு அதிகாரியாக இருக்க மாட்டார். அந்த பதவியை பிடிக்க முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலரும் முயற்சித்து வருகின்றனர். முதல்வரிடம் ஆதிக்கம் செலுத்தும் முக்கியஸ்தரின் உதவியைக் கேட்டுள்ளார்கள். உதயநிதியின் துணைமுதல்வர் பதவியை வைத்து பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினிடமும் ஆட்சியிலும் பவர் ஃபுல்லாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உதயநிதியை சுற்றியிருக்கும் பதவிகளுக்கான அதிகாரிகளை முடிவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.
துணை முதல்வர் பதவி: துணை முதலமைச்சர் பொதுவாக உள்துறை அமைச்சர் போன்ற கேபினட் இலாகாவையும் வைத்திருப்பர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்துறையை வைத்துள்ள நிலையில், அவர் இல்லாத நேரங்களில்.. அவர் வெளிநாடு செல்லும் நேரங்களில் உதயநிதி ஸ்டாலின் அவரின் துறைகளை கவனிப்பார். பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது.. முதல்வருக்கு துணையான பதவிதான்.
ஒரு முதல்வர் இல்லாத நேரங்களில் அவரின் முடிவுகளை எடுக்கும் பவர் துணை முதல்வருக்கு உண்டு. அமைச்சரவை கூட்டங்களை நடத்த முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் உத்தரவின் பெயரில் துணை முதல்வர் கூட்டங்களை நடத்த முடியும். ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்.
துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு மட்டுமே நேற்று வெளியிடப்பட்டது, மாறாக அவர் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications