பேனரில் மிஸ்ஸான அந்த வார்த்தை.. உதயநிதி டிக் அடிக்க போகும் "புள்ளி".. அமைச்சரானதும் முதல் வேலை இதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நாளை அமைச்சராகும் நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் யார்? என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

ஒருவழியாக தமிழ்நாடு அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. 19 மாதங்களுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டம் செயலாக்கம் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.

 எப்போது

எப்போது

தமிழ்நாடு அமைச்சராக நாளை காலை 9.30-மணிக்கு அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவிருக்கிறார் உதயநிதி. ராஜ்பவனில் நடக்கும் இந்த விழாவில் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட 500 நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நிகழ்ச்சிக்காக அழைப்பு சென்றுள்ளது. கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு சென்றுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 14ந்தேதிக்கு பிறகு உதயநிதி கலந்துகொள்வதற்காக எற்கனவே கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் வரவேற்பு பேனர்கள் எல்லாம் மீண்டும் மாறுதல் செய்யப்படுகிறது.

பேனர் குழப்பம்

பேனர் குழப்பம்

குறிப்பாக, உதயநிதியின் பெயருக்கு முன்னால் மாண்புமிகு என்கிற வாத்தை இல்லாமல் பேனர்கள் ரெடியாகியிருந்தன. இப்போது மாண்புமிகு என்பதை சேர்க்கவும், உதயநிதியின் துறையின் பெயரை அச்சிடவும் புதிய பேனர்கள் தயாரிக்க மா.செ.க்கள் மூலம் திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பல பேனர்கள் புதிதாக அடிக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் உதயநிதியின் உதவியாளர்களாக வருவதற்கு பலரும் முயற்சித்துள்ளனர். அதாவது துறை ரீதியான செயலாளர் இல்லாமல், அமைச்சருக்கு என்று உதவியாளர் இருப்பார்.

பிஏக்கள்

பிஏக்கள்

பெரும்பாலும் உதயநிதி பொறுப்பேற்க போகும் விளையாட்டு, இளைஞர் நலன் துறைக்கு ஐஏஎஸ் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் உதயநிதியின் தனிப்பட்ட உதவியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் தனது உதவியாளர்களை செலக்ட் செய்வதில் அவரே முழு கவனம் செலுத்துகிறார் என்று கூறப்படுகிறது. அரசு சார்பில், 3 பி.ஏ.க்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த இடத்தை பிடிக்க அரசு அதிகாரிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.

அமைச்சர் பதவி ஏற்பு

அமைச்சர் பதவி ஏற்பு

இதற்கான ஆலோசனைகள் இப்போதே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சராக பதவியேற்றவுடன், பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளார் உதயநிதி. அமைச்சர் ஆனதும் உதயநிதியின் முதல் வேலை இதுதான் என்று கூறப்படுகிறது. அமைச்சரானதும் கோட்டையில் உள்ள தனது அறைக்கு வரும் உதயநிதியை சந்தித்து வாழ்த்துச் சொல்லவிருக்கிறார்கள் அமைச்சர்கள். இதற்காக விலை உயர்ந்த பொக்கேக்களுக்கு அமைச்சர்கள் அனைவரும் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், அமைச்சர் பொறுப்பேற்றதும் தனது துறை சார்ந்து முதல் கையெழுத்து போடுகிற வைபவம் நடக்க வேண்டும் என உதயநிதிக்கு நெருக்கமான தரப்பு. அதனால், அவர் துறை சார்ந்து புதிய அறிவிப்புகள் செய்யவும், என்ன மாதிரியான அறிவிப்புகளை செய்வது எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாம்.

அமைச்சரான பின் இந்த வாரம் அவரின் சொந்த தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை உதயநிதி பார்வையிட திட்டமிட்டு உள்ளதாகும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+