Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதியின் பிஏ யார்? அந்த ஒரு பதவி ரொம்ப முக்கியம்.. ரெடியான ஐஏஎஸ் லிஸ்ட்.. அடடா அவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயலாளர் பதவியை பிடிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியாக இருக்கும் பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும். மாநில அமைச்சர்கள் குழுவின் சீனியாரிட்டியில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி ஆகும் இது.

udayanidhi stalin dmk m k stalin

உதயநிதி துணை முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

யார் அந்த ஐஏஎஸ்?: குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸராக இருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சிபாரிசை கேட்டு நெருங்கி வருகின்றனர். ஆனால், உதயநிதியோ வேறு சிலரின் ஆலோசனையைக் கேட்டு தனக்கான செயலாளர்களை முடிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம். முக்கியமான ஐஏஎஸ் ஒருவரின் பெயரும் இதில் உள்ளதாம். அதேபோல, அவருக்கான தனி உதவியாளர்கள் பதவியை கைப்பற்ற, ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளும் கிச்சன் கேபினெட்டை அணுகி வருகிறார்கள்.

இந்த நிலையில், அரசியல் பி.ஏ. ஒருவரை உதயநிதி நியமித்துக்கொள்ள முடியும். அவர் அரசு அதிகாரியாக இருக்க மாட்டார். அந்த பதவியை பிடிக்க முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலரும் முயற்சித்து வருகின்றனர். முதல்வரிடம் ஆதிக்கம் செலுத்தும் முக்கியஸ்தரின் உதவியைக் கேட்டுள்ளார்கள். உதயநிதியின் துணைமுதல்வர் பதவியை வைத்து பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினிடமும் ஆட்சியிலும் பவர் ஃபுல்லாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உதயநிதியை சுற்றியிருக்கும் பதவிகளுக்கான அதிகாரிகளை முடிவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

துணை முதல்வர் பதவி: துணை முதலமைச்சர் பொதுவாக உள்துறை அமைச்சர் போன்ற கேபினட் இலாகாவையும் வைத்திருப்பர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்துறையை வைத்துள்ள நிலையில், அவர் இல்லாத நேரங்களில்.. அவர் வெளிநாடு செல்லும் நேரங்களில் உதயநிதி ஸ்டாலின் அவரின் துறைகளை கவனிப்பார். பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது.. முதல்வருக்கு துணையான பதவிதான்.

ஒரு முதல்வர் இல்லாத நேரங்களில் அவரின் முடிவுகளை எடுக்கும் பவர் துணை முதல்வருக்கு உண்டு. அமைச்சரவை கூட்டங்களை நடத்த முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் உத்தரவின் பெயரில் துணை முதல்வர் கூட்டங்களை நடத்த முடியும். ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும்.

துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. நேற்று ஆளுநர் மாளிகை இதை பற்றி செய்தி குறிப்பாக வெளியிட்ட நிலையில், இன்று அரசு அறிவிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+