40 தொகுதிகளில் வெல்வது யார்? கைஓங்கிய திமுக கூட்டணி! அதிமுகவை முந்திய பாஜக! தந்திடிவி சர்வே ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் வெல்லப்போவது யார்? என்பது பற்றி தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் எனவும், அதிமுகவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வெல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முழு விபரம் வருமாறு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பாளர்கள், தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Who will be win 40 seats in Tamil Nadu and BJP Thanthi TV opinion polls result here

இந்நிலையில் தான் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழக லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி சார்பில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறும் எனவும் 5 தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே திமுக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மாறாக புதுச்சேரியில் பாஜக வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடும் இழுபறி நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 இழுபறி தொகுதியில் கடைசி நேரத்தில் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர், கோவை, திருநெல்வேலி, கள்ளக்கறிச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி நிலவலாம் என கூறப்பட்டுள்ளது. இதில் வேலூரில் திமுக மற்றும் பாஜக கூட்டணி ஏசி சண்முகத்துக்கும், திருநெல்வேலியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயும், கோவையில் திமுக மற்றும் பாஜக இடையேயும், கள்ளக்குறிச்சியில் கள்ளக்குறிச்சியில் அதிமுக மற்றும் திமுக இடையேயும், பொள்ளாச்சியில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கொஞ்சம் முயற்சி செய்தால் கள்ளக்குறிச்சி மற்றும் பொள்ளாச்சியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் திமுக கூட்டணி 41 முதல் 47 சதவீத ஓட்டுகளையும், அதிமுக கூட்டணி 32 முதல் 38 சதவீத ஓட்டுகளையம், பாஜக 15 முதல் 21 சதவீத ஓட்டுகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி 4 முதல் 6 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் ஒன்று முதல் 3 சதவீத ஓட்டுகளையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+