பெரிய முடிவு? இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இவங்கதான் அமைச்சர்கள்? திமுகவில் யாருக்கு சான்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2024 லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நாளை லோக்சபா தேர்தலில் கடைசி கட்ட தேர்தல் நடக்க உள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக அல்லது என்டிஏ கூட்டணி வெல்ல வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றன. சில கணிப்புகள் பாஜக ஆட்சி அமையும் என்றும் கூறுகின்றனர்.

lok sabha election 2024 2024

யோகேந்திர யாதவ் போன்ற அரசியல் ஆய்வாளர்கள் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறுகின்றனர். ஒருவேளை 2024 லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் எந்தெந்த வேட்பாளர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கணிப்பு: இந்தியா கூட்டணியில் அமைச்சர்களாக வாய்ப்பு உள்ள டாப் தலைவர்கள் லிஸ்ட் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. இது தோராயமான லிஸ்ட் மட்டுமே.

காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். அது தவிர அவருக்கு முக்கிய அமைச்சரவை கூட தரப்படலாம். இவர் உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மற்றும் கேரளாவில் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் கண்ணுஜ் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவர் வெற்றிபெறும் பட்சத்தில் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் மீண்டும் களமிறங்கி உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இவர் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

கேரளாவில் காங்கிரஸ் நிர்வாக பொதுச்செயலாளர் எம்பி கேசி வேணுகோபால் ஆலப்புழா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இவர் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இவர் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

ஆம் ஆத்மி மேற்கு டெல்லி வேட்பாளர் மஹாபால் மிஸ்ரா அந்த கட்சியில் கவனம் பெறும் நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம்.

திமுக சார்பாக எம்பி கனிமொழி தூத்துக்குடியில் களமிறங்கி உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இவர் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன. திமுக 3- 4 அமைச்சர் பதவிகளை பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.

திமுக சார்பாக எம்பி ஆ ராசா நீலகிரியில் களமிறங்கி உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இவர் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன. இவர் ஏற்கனவே அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால் அமைச்சர் பதவியை பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடும் பட்சத்தில் க்ரிஷ்ணாநகர் மேற்கு வங்க வேட்பாளர் மஹுவா மொய்த்ரா அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.,

காங்கிரஸ் சார்பாக ஒய் எஸ் சர்மிளா ஆந்திர பிரதேசத்தில் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளனர். அவர் கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

ராஜஸ்தான் ஜாலூர் தொகுதியில் போட்டியிடும் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட் அங்கே அமைச்சராகும் வாய்ப்புகள் உள்ளன.

பெங்களூரில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ சவுமியா ரெட்டி பெங்களூர் தெற்கில் தேஜஸ்வி யாதவை தோற்கடித்தால் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

காங்கிரஸ் வேட்பாளர் திருவள்ளூர் தொகுதி சசிகாந்த் செந்தில் வெற்றிபெறும் பட்சத்தில் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் அம்ரோஹா வேட்பாளர் டேனிஷ் அலி அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

சிபிஎம் சார்பாக மதுரை வேட்பாளர் சு வெங்கடேசன் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

சிபிஎம் சார்பாக வடகரா வேட்பாளர் சைலஜா டீச்சர் அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+