ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் எப்படியாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என பலரும் போட்டி போடுகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த வைத்தியலிங்கமும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம்...
தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரத்தநாடு தொகுதியை இதுவரை நிலையாக எந்த கட்சியும் தங்கள் கோட்டையாக தக்கவைத்துக்கொண்டதில்லை. கடந்த 1971ம் ஆண்டு முதல் 2021 வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் ஒரே ஒரு முறை மட்டுமே (1980) காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்து தேர்தல்களிலுமே திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் அவர் திமுகவில் ஐக்கியமானதை தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திமுகவில் ஐக்கியம்
ஒரத்தநாடு தொகுதியில் 2001, 2006, 2011 என தொடர்ந்து ஹாட்ரிக் அடித்து எம்எல்வாக இருந்தவர் வைத்தியலிங்கம். 2016-ல் திமுகவின் ராமச்சந்திரனிடம் தோற்று பின் 2021 தேர்தலில் மீண்டும் வெற்றி வாகை சூடியவர் வைத்தியலிங்கம். இதனால் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர் என்ற நம்பிக்கையில் இந்த முறை திமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் வைத்தியலிங்கம்.
நரேந்திரன் என்பவர் ஒரத்தநாடு தொகுதியில் சீட் கேட்க திட்டம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களால் தனது பலத்தை இழந்து நிற்கும் அதிமுகவை விட தற்போது திமுகவில் சாதகமான நிலை இருப்பதால் தனது வெற்றி இன்னும் எளிதாகும் என்பதால் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார் வைத்தியலிங்கம். ஆனால் இவரது விருப்பத்தில் மண் அள்ளிப்போடும் விதமாக இளைஞரான நரேந்திரன் என்பவர் ஒரத்தநாடு தொகுதியில் சீட் கேட்டு திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால் தனக்கு வாய்ப்பு கிடைக்குமோ? கிடைக்காதோ? என கலக்கத்தில் இருக்கிறாராம் வைத்தியலிங்கம்.
மருத்துவரான நரேந்திரன் வேறு யாருமில்லையாம். ஒரத்தநாடு தொகுதியின் திமுக முன்னோடியும், மூத்த நிர்வாகியுமான சந்திரசேகரன் என்பவரின் மகன் தானாம். ஒரத்தநாடு தொகுதியில் திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் என்பதால் சந்திரசேகரனின் மகனை திமுக தலைமை டிக் அடித்துவிடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் வைத்தியலிங்கம். அதோடு, இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வில் படித்த இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என உதயநிதி தரப்பில் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதும் நரேந்திரனுக்கு கூடுதல் பலமாம்.
உதயநிதி டீம்
அதோடு, இவ்வளவு காலம் அதிமுகவில் இருந்து தங்களுக்கு எதிராக அரசியல் செய்துவிட்டு, திமுகவில் ஐக்கியமாகி கொஞ்ச காலம் கூட ஆகாத வைத்தியலிங்கத்திற்கு சீட் கொடுத்தால் சொந்த கட்சியினரின் வெறுப்பையும் சம்பாதிக்க நேருமோ என தலைமை கணக்கு போடும் என்றும், அதனால் வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கம்மிதான் என்றும் உடன் பிறப்புகளே கிசுகிசுக்கிறார்களாம். ஆனாலும், வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம் வைத்தியலிங்கம்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications