விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு பாதிப்பு? 'ஒன்இந்தியாதமிழ்' போல் முடிவில் ஆச்சரியம்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு பாதிப்பு என்று 'ஒன்இந்தியா தமிழ்' நடத்திய ஆன்லைன் போல் வித்தியாசமான முடிவுகளை கொடுத்துள்ளது.
சர்கார் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பஞ்சுகளை பேசினாலும் பேசினார், அரசியல் வருகை குறித்த யூகங்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.
இந்த நிலையில்தான், நமது 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்தில், ஆன்லைன் போல் ஒன்றை நடத்தினோம்.

முதலிலேயே எஸ்கேப்
இந்த ஆன்லைன் வாக்குப்பதிவில், விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு பாதிப்பு? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு 6 ஆப்ஷன்கள் தரப்பட்டன. நோ கமெண்ட்ஸ் என்ற ஆப்ஷனும் வழங்கப்பட்டது. இதில் கமெண்ட் அளிக்க விருப்பமில்லை என்று 11.72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்று பார்ப்போம்.

திமுகவிற்கு பாதிப்பு
விஜய் அரசியல் வருகை, திமுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று, 10.4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு பாதிப்பு என்று 7.79 சதவீதம் வாசகர்கள் கருதுகிறார்கள். விஜய் எடுக்கும் நிலைப்பாடுகள், திமுக கொள்கைகளுடன் இயைந்து இருப்பதனால் திமுகவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள் நமது வாசகர்கள்.

பாஜக குறைவுதான்
ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்குதான் விஜயால் பாதிப்பு ஏற்படும் என்று 7.61 சதவீதம் பேர் தெரிவிக்கிறார்கள். இது அதிமுகவிற்கு பாதிப்பு என்று கூறியோரைவிட சற்று குறைவாக உள்ளது. அதேநேரம் பாஜகவிற்கு பாதிப்பு என்று 2.7 சதவீதம் பேர்தான் கூறுகிறார்கள். பாஜகவை பெரிய போட்டியாளராக கருதவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

விஜய்க்கே பாதிப்பு
பிற கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று, 4.49 சதவீதம் பேர் கூறுகிறார்கள். ஆனால் இதில் ஆச்சரியப்படத்தக்க ரிசல்ட் என்னவென்றால், விஜய் அரசியலுக்கு வருவது அவருக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று 55.29 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள் விஜய் சினிமாவில் நடிப்பதே போதும் என்ற மனநிலையில் உள்ளவர்கள். இந்த மனநிலையை, விஜய் தரப்பு கவனத்தில் எடுக்கும் என்று நம்பலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications