பொங்கல் பரிசு.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? ரூ.1000 ஆ இல்லை ரூ.2000 ஆ? எப்படி வழங்கப்படும்?
சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.
எப்படி வழங்கப்படும்?: பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறதாம்.
நேரடியாக வங்கியில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப தலைவர்களின் வங்கி கணக்கு தேவை. அதோடு இல்லாமல்.. வங்கி கணக்கில் அவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு பயன் இல்லாமல் போய்விடும்.
இதன் காரணமாக நேரடியாக வங்கியில் பணம் செலுத்துவதற்கான ஆலோசனைகளை.. நல்லவை தீமைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டோக்கன்: வங்கி கணக்கில் இல்லாமல் நேரடியாக வழங்கும் பட்சத்தில்.. பொங்கல் பரிசுக்கான டோக்கன் அடுத்த வாரம் இறுதியில் இருந்து.. பெரும்பாலும் 20ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.
அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இந்த வருடம் கரும்பு வழங்கப்படும், ஆனால் வெல்லம் இருக்காது.
யாருக்கு வழங்கப்படும்: அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் என்று எல்லோருக்கும் இந்த பணம் வழங்கப்படும்.
அடுத்த வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் அதற்கு முன்பாக இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ரேஷன் கார்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் டோக்கன் வழங்கப்படும். அதில் நேரம், தேதி இருக்கும். அந்த நாளில் மட்டும் சென்று பரிசு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
சிலருக்கு 2000 ரூபாய்: இதில் சிலருக்கு மட்டும் அந்த மாதம் ரூ.2000 கிடைக்கும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது,மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10ம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர்களுக்கு மட்டும் அரசு சார்பாக ரூ.2000 கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications