"அடிமடியிலேயே".. பட்ட பாடெல்லாம் போச்சே.. விழிக்கும் 2 லீடர்கள்.. பாஜகவை அசரடிக்கும் டிடிவி தினகரன்?
3வது அணிக்கு தலைமை தாங்க தயாராகி வருகிறாராம் டிடிவி தினகரன்
சென்னை: ஓபிஎஸ் + சசிகலாவின் அரசியல் எடுபடாமல் போய் கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் மொத்த கவனமும் அமமுக பக்கம் திரும்பி உள்ளதாம்.. என்ன காரணம்?
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. கட்சியை பலப்படுத்தும் வேலையிலும் பாஜக மும்முரமாகி விட்டது.. அதிலும், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, என நாலாபக்கமும் உள்ள கட்சிகளில் அதிருப்திகள் யார் என்பதை பார்த்து கொக்கி போட்டு தூக்கும் வேலையில் இறங்கிவிட்டதாகவே தெரிகிறது.
பாஜகவுக்கு யார் சென்றாலும், முக்கிய பதவி தரப்படும் என்பதால், பலரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருவது இயல்புதான்.. ஆனாலும், உடனடியாக முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதால், இந்த கட்சிகளின் அதிருப்தியாளர்கள் பொறுமை காத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

பிளஸ் POINT 1
மற்றொருபக்கம், வரப்போகும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமையாவிட்டாலும், தனித்து களம்காணும் வகையில், அமைய உள்ள கூட்டணியை பலப்படுத்தும் பணிகளிலும் கவனம் செலுத்தவும் முயன்றுள்ளது.. காரணம், கடந்த கால அரசியலை பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் இல்லாமல் 3வது அணி அமைத்து போட்டியிட்டாலோ அல்லது திமுக அணியில் இருந்தாலோ எம்பி தேர்தல்களில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது.. ஆனால் இதுவே, எடப்பாடி பழனிசாமி தலையிலான அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், சொற்ப இடம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது..

பிளஸ் POINT 2
அப்படியே ஒருசில இடங்கள் ஒதுக்கினாலும், ஒற்றை இடத்தில் வெற்றி பெறுவதே பெரும் சிரமமாகி விடுகிறது.. அதனால்தான், தனித்து போட்டியிடலாமா அல்லது டிடிவி ஆதரவுடன் 3வது அணி அமைத்து, தங்கள் தலைமையிலேயே தேர்தலை சந்திக்கலாமா என்று பாஜக நினைக்கிறது.. கடந்த எம்பி தேர்தலின்போதே அமமுகவுடன் கூட்டணி வைக்க ஒரு முயற்சி எடுக்கப்பட்டது.. அதில், முதலில் சிக்கியவர் அமமுகவின் டிடிவி தினகரன்தான் என்றார்கள்.. காரணம், ஒருகுறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை இவர் தொடர்ந்து தக்க வைத்து வருவது டெல்லியின் கவனத்தை ஈர்த்துள்ளது..

பிளஸ் POINT 3
அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பலவீனமாகிவிட்டது.. அதாவது 41 வாக்கு சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்தை தற்போது அக்கட்சி நடந்துமுடிந்த தேர்தலில் இழந்துவிட்டது.. வெறும் 33தான் வாக்கு சதவீதம் உள்ளது. இழந்து போன அந்த வாக்கு சதவீதத்தில், 6 சதவீதம் சீமான் பிரித்துள்ளார்.. மிச்சம் 2 சதவீதத்தை டிடிவி பிரித்துள்ளார்.. இப்போது ஓபிஎஸ் டீம் தனியாக பிரிந்துள்ளதால், அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், இதுவும் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்ட்தான்..

பிளஸ் POINT 4
இதைதவிர, எடப்பாடியை எதிர்ப்பதிலும், திமுகவை எதிர்ப்பதிலும் தொடர்ந்து கடுமை காட்டி வருவதும், மேலிடத்தை கவர்ந்துள்ளது.. மொத்தத்தில், டிடிவியின் முதிர்ச்சியான அரசியலே, பாஜக தேடி வந்து கூட்டணி வைக்க காரணமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம், இந்த நம்பிக்கை ஓபிஎஸ் மற்றும் சசிகலா மீது தகர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஓபிஎஸ் பொதுவாகவே, பாஜகவின் ஆதரவாளர் என்றாலும், சில சமயம் திமுகவை திடீரென புகழ்ந்துவிடுவதையும் கவனிக்காமல் இல்லை..

பிளஸ் POINT 5
இந்த மதில்மேல்பூனை அரசியல், பாஜக தலைவர்களுக்கு எரிச்சலை தந்துள்ளதாம்.. சசிகலாவும் முன்புபோல் தொண்டர்களையும் அவரது சொந்த ஆதரவாளர்களையும் கவரவில்லை என்பதையும் பாஜக மேலிடம் கவனித்துள்ளது.. சுருக்கமாக சொல்லப்போனால், சசிகலா + ஓபிஎஸ் இருவருக்கும் அரசியல் வியூகங்கள், சரியாக அமைக்க தெரியவில்லை.. அப்படியே நல்ல சான்ஸ்கள் கிடைத்தாலும் இருவரும் கோட்டை விட்டுவிடுகிறார்கள் என்ற பிம்பம் விழுந்துள்ளதாம்.. இந்த விஷயத்தில் பக்காவாக ஸ்கெட்ச் போடும் தினகரன், 4 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் நிலையில், மேலிட குட்புக்கில் தொடர்ந்து இடம் பிடித்துள்ளாராம்..

3வது டீம்
எனினும் 3வது அணி அமையும்பட்சத்தில் பாஜக தலைமையிலான 3வது அணி அமையுமா? அல்லது தினகரன் தலைமையிலான 3 அணி அமையுமா என்பதும் ட்விஸ்ட்தான்.. காரணம், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லக்கூடிய தலைவராக தன்னை முன்னிறுத்தி கொண்டே வருகிறாராம் டிடிவி தினகரன்.. தினகரனின் இந்த முடிவுக்கும், முயற்சிக்கும் பெருமளவு ஆதரவும் கிடைத்து வருகிறது..

ஸ்டிராங் தலைவர்
ஏனென்றால், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வு தினகரனிடம் இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.. இதுவரை தினகரன் பேட்டிகளை பார்த்தாலும், எடப்பாடி + திமுகவை மட்டுமே அதிகமாக விமர்சித்து வந்திருப்பதால், தினகரன் 3வது அணிக்கான தலைவராக இருந்து வழிநடத்துவார், இதன்மூலம் பாஜகவும் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்றும் நம்பப்படுகிறதாம்.. என்னதான் நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications