"விட்றாதீங்க" அவரை.. கிளைமாக்ஸ் நெருங்கியாச்சாமே.. "தலைவர்" ரூட்டில் வரும் பாஜக.. தலைவலியில் எடப்பாடி
3வது அணிக்கு தலைமை தாங்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக, திமுக ஒருபக்கம் இருந்தாலும், 3வது அணி நிச்சயம் அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இந்த 3வது அணி யார் கையில் வரப்போகிறது? யார் தலைமையில் தேர்தலை சந்திக்க போகிறது? என்பதே தமிழக அரசியலில் பரபரத்து காணப்படும் செய்தியாகும்.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. கட்சியை பலப்படுத்தும் வேலையிலும் பாஜக மும்முரமாகி விட்டது.. அதிலும், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, என நாலாபக்கமும் உள்ள கட்சிகளில் அதிருப்திகள் யார் என்பதை பார்த்து கொக்கி போட்டு தூக்கும் வேலையில் இறங்கிவிட்டதாகவே தெரிகிறது.
பாஜகவுக்கு யார் சென்றாலும், முக்கிய பதவி தரப்படும் என்பதால், பலரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருவது இயல்புதான்.. ஆனாலும், உடனடியாக முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதால், இந்த கட்சிகளின் அதிருப்தியாளர்கள் பொறுமை காத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

கூண்டு
மற்றொருபக்கம், வரப்போகும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமையாவிட்டாலும், தனித்து களம்காணும் வகையில், அமைய உள்ள கூட்டணியை பலப்படுத்தும் பணிகளிலும் கவனம் செலுத்தவும் முயன்றுள்ளது.. கடந்த எம்பி தேர்தலின்போதே இப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டது.. அதில், முதலில் சிக்கியவர் அமமுகவின் டிடிவி தினகரன்தான் என்றார்கள்.. காரணம், ஒருகுறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை தக்கவைத்தபடி வருவது டெல்லி கவனத்தை எப்போதோ ஈர்த்துவிட்டது.

எடப்பாடி ஓபிஎஸ் சசிகலா தினகரன்
அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், அதிமுகவை மீட்டெடுப்பதே அமமுகவின் லட்சியம்" என்றார்.. இதைத்தான் சசிகலாவும் 2 வருடங்களாக சொல்லி வருகிறார்.. எடப்பாடி + ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் என யார் கையில்தான் அதிமுக செல்ல போகிறது என்பது தெரியவில்லை.. ஆனால், பாஜகவை தவிர்த்துவிட்டு, கூட்டணியும் இல்லாமல் அதிமுகவை நடத்த முடியாது, என்பது மட்டும் தெளிவாகி உள்ளது.

ரத்தத்தின் ரத்தங்கள்
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை கழட்டிவிட்டு, மற்றவர்களை எல்லாம் இணைத்துக் கொண்டு தன் தலைமையில் எம்பி தேர்தலில் களமிறங்க பாஜக கணக்கு போடுகிறது.. காரணம், கடந்த கால அரசியலை பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் இல்லாமல் 3வது அணி அமைத்து போட்டியிட்டாலோ அல்லது திமுக அணியில் இருந்தாலோ எம்பி தேர்தல்களில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது.. ஆனால் இதுவே, எடப்பாடி பழனிசாமி தலையிலான அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், சொற்ப இடம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.. அப்படியே ஒருசில இடங்கள் ஒதுக்கினாலும், ஒற்றை இடத்தில் வெற்றி பெறுவதே பெரும் சிரமமாகி விடுகிறது..

ஹாட் நியூஸ்
அதனால்தான், தனித்து போட்டியிடலாமா அல்லது ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆதரவுடன் 3வது அணி அமைத்து, தங்கள் தலைமையிலேயே தேர்தலை சந்திக்கலாமா என்று பாஜக நினைக்கிறது.. இதற்காகவே ரஜினியை களமிறக்கிவிட்டுள்ளதாகவும், அந்த அசைன்மென்ட்டைதான் ரஜினிக்கு மேலிடம் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாஜகவை முந்திக் கொண்டு, தன் தலைமையில் தேர்தலை சந்திக்க டிடிவி கணக்கு போடுகிறாராம்.. இதுதான் தற்போதைய ஹாட் நியூஸ் ஆகும்.

செம பிளான்
டிடிவி தினகரன், அமமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த போகிறார்.. இந்த பொதுக்குழு கூட்டத்தைதான் மிக மிக அதிகம் நம்பி உள்ளாராம் தினகரன்.. அமமுகவின் பலத்தை இதில் நிரூபிக்க போவதுடன், இதற்காகவே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. பிரம்மாண்டமாக பொதுக்குழுவை கூட்டி நடத்தி காட்டினால் தொண்டர்கள் உற்சாகமடைவார்கள், மொத்த பேரின் கவனமும் அமமுக பக்கம் திரும்பும் என்பது டிடிவி தினகரனின் பிளான் ஆகும்.

எடப்பாடி பழனிசாமி
இந்த பொதுக்குழு வெற்றியை காரணம் காட்டியே, எடப்பாடி பழனிசாமியை அரசியலில் தோற்கடித்தே தீர வேண்டும் என்றும் தினகரன் யோசிக்கிறாராம்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் போல் அல்லாமல், எடப்பாடி பழனிசாமியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவது அமமுக மட்டுமே என்பதை டெல்லி மேலிடத்துக்கு காட்டவும் முடிவு செய்துள்ளாராம்.. இதன்மூலம், எடப்பாடி & ஓபிஎஸ் & சசிகலா இவர்கள் எல்லாரையும்விட திமுகவை அதிகம் எதிர்த்து வருவது அமமுகதான் என்றும், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இருப்பது அமமுகவில்தான் என்பதையும் தெளிவுபடுத்த போகிறாராம்.

பழனிசாமி வேணாம்
இதெல்லாம் எதற்காக என்றால், பாஜக தலைமையிலான 3வது அணி அமைவதைவிட, அமமுக தலைமையிலான 3 அணி அமைய வேண்டும் என்பதற்காகத்தானாம்.. "ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்க சூழல் ஏற்பட்டால் நிச்சயம் கூட்டணி வைப்போம், ஆனால் எக்காரணம் கொண்டும் பழனிசாமியை மட்டும் சேர்த்துக் கொள்ள முடியாது" என்று 2 நாட்களுக்கு முன்புகூட தினகரன் பேட்டி தந்ததன் அர்த்ததும் இதுதானாம்.. ஓபிஎஸ்ஸுடன் அமமுகவுக்கான கூட்டணி குறித்து 15-ம் தேதி நடக்க போகும் பொதுக்குழுவில் ஆலேசிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது..

ரஜினி + பாஜக
அதாவது, கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லக்கூடிய தலைவராக தன்னை முன்னிறுத்தி கொண்டே வருகிறாராம் டிடிவி தினகரன்.. தினகரனின் இந்த முடிவுக்கும், முயற்சிக்கும் பெருமளவு ஆதரவுதான் கிடைத்து வருகிறது.. ஏனென்றால், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வு தினகரனிடம் இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.. இதுவரை தினகரன் பேட்டிகளை பார்த்தாலும், எடப்பாடி + திமுகவை மட்டுமே அதிகமாக விமர்சித்து வந்திருப்பதால், தினகரன் 3வது அணிக்கான தலைவராக இருந்து வழிநடத்துவார், அதன்மூலம் அதிமுக மீட்டெடுக்கப்படும், இதன்மூலம் பாஜகவும் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்று நம்புகிறார்கள்.. ஆனால், பாஜக என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை.. அதிலும் ரஜினி?! பார்ப்போம்..!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications