“தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இந்த செயலை செய்திருப்பார்”.. சேம் சைடு கோல் போட்ட நாஞ்சில் சம்பத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை, சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும்? என்ற கேள்வி வந்துவிட்டது. முதலமைச்சர் விஜய்தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும்" என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இரவு நேரத்தில் போதையில் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Who Will Protect the Common People Nanjil Sampath Puts Question to CM Vijay

தவெக எம்.எல்.ஏ, பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும், தவெக எம்.எல்.ஏவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.

அருள் விக்னேஷ் அப்படி செய்திருக்கமாட்டார் என தவெகவினர் தெரிவிக்கின்றனர். தவெக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர், அருள் விக்னேஷ் பாவம் என்றும், அவர் குறித்து பரவுவது திமுகவினர் கிளப்பிவிட்ட வதந்தி என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், அருள் விக்னேஷ் இந்த தவறை செய்திருக்காலம் என தவெக கொள்கை பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தெரிவித்திருக்கிறார்.

தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பேட்டியில், "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இந்தச் செயலை செய்திருப்பார் என நம்புகிறேன். இல்லையென்றால், இவ்வளவு பூதாகரமாக இந்தச் செய்தி வராது. ஒரு குற்றவாளி தப்பிக்கும் போராட்டத்தில்தான் அவர் இருப்பார்.

பெண் மாவட்ட ஆட்சியரின் கணவர், இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வருகிறது. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தெரியவரும். மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை, சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும்? என்ற கேள்வி ஏற்கனவே வந்துவிட்டது. அதற்கான பதிலை தலைவர் தான் சொல்லவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகவும், முக்கிய பேச்சாளராகவும் செயல்பட்டு வருபவர் நாஞ்சில் சம்பத். மதிமுகவில் வளர்ந்த நாஞ்சில் சம்பத், பின்னர் அதிமுகவில் இணைந்து செயல்பட்டார். அதன்பிறகு திமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். தற்போது தவெகவில் பரப்புரைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+