உலகின் டாப் பணக்காரர் vs பவர்புல் மனிதர்.. டிரம்ப் vs எலான் மஸ்க் சண்டை.. கடைசியில் யார் வெல்வார்?
சென்னை: அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க இரு ஆளுமைகளான எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் துணிச்சலான மற்றும் வெளிப்படையான கருத்துக்களைக் கொண்டவர்கள். ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நபர்.. இன்னொருவர் உலகிலேயே பவர் புல் நபர். சரி இந்த இரண்டு பேருக்கும் இடையே இப்போது மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் யாருக்கு சாதகமான சூழல் நிலவும்.. யார் கடைசியில் அரசியல் ரீதியாக வெற்றிபெறுவார் என்று இங்கே பார்க்கலாம்.
இருவரும் ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்பினால், அது அமெரிக்க நாட்டையே உலுக்கிவிடும். இந்த பலப்பரீட்சையில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
டிரம்பின் பலம்: அரசியல் செல்வாக்கு
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபர். 2015 முதல் அரசியல் ரீதியாக வெளிச்சத்தில் இருந்து வருகிறார். குடியரசுக் கட்சியின் முக்கிய நபராகவும் இருக்கிறார்.
அவருக்கு லட்சக்கணக்கான விசுவாசமான ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக பழமைவாத அமெரிக்கர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர்கள் வாக்களிப்பது மட்டுமல்லாமல், டிரம்பிற்கு ஆதரவாக நடக்கும் பேரணிகளில் கலந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் அவரை ஆதரிக்கிறார்கள்.

அரசாங்கத்தில் டிரம்ப்பிற்கு இருக்கும் செல்வாக்கு அளப்பரியாதது. சட்டமியற்றுபவர்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்க முடிவுகளை அவரால் மாற்றம் முடியும். நாடாளுமன்றம், சிஐஏ, IRS, FBI போன்ற பல பிரிவுகளை அவர் கட்டுப்படுத்துகிறார்
பெரிய வணிகக் குழுக்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் குடியரசுக் கட்சியினர் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு நெருக்கமாக உள்ளனர். சட்டங்களை இயற்றுபவர்களின் ஆதரவைப் பெறுவது அவருக்கு அத்துப்படி. இதனால் மஸ்க் நடத்தும் பல பிஸினஸ்களை முடக்கும் வகையில் அவர் சட்டம் கொண்டு வர முடியும்.
ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை வழங்கும் நிறுவனங்களை இவர்தான் கட்டுப்படுத்துகிறார். அதாவது NASA, DoD, DoE போன்றவை இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மஸ்க் நடக்கும் பல பிஸினஸ்களை முடக்க டிரம்ப்பால் முடக்க முடியும்.
அதோடு மஸ்க் மீது பொருளாதார ரீதியாக சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
எலான் மஸ்கின் பலம்: தொழில்நுட்பம் மற்றும் ஊடக வெளிச்சம்
எலான் மஸ்க் உலகின் பணக்காரர்களில் ஒருவர். அவர் அரசியல் பிரச்சாரங்களுக்கு நிதியளிக்க முடியும். நவீன அரசியலில் பணம் ஒரு முக்கிய சக்தியாக விளங்குகிறது. அதோடு ஜே டி வான்ஸை துணை அதிபரில் இருந்து அதிபராக்க மஸ்க்கால் முயல முடியும்.
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீனின் பலான லிஸ்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மஸ்க் - டிரம்ப் இடையிலான மோதலால் டிரம்ப் மீது மஸ்க் இந்த புகாரை வைத்து உள்ளார். இந்த புகார் உண்மையாகும் பட்சத்தில் அது அமெரிக்காவில் பெரிய புயலை கிளப்பும். இதன் வழியாக டிரம்ப்பை பதவி நீக்கம் செய்து ஜே டி வான்ஸை துணை அதிபரில் இருந்து அதிபராக்க மஸ்க் முயன்று வருகிறார் .
மஸ்க்.. எக்ஸ் சமூக ஊடகத்தை அவர் வைத்திருக்கிறார். உலகளாவிய செய்திகள், அரசியல் விவாதங்கள் இதில் தினமும் நடக்கின்றன. ஒரு கிளிக்கில் குரல்களை ஒடுக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ முடியும். டிரம்பிற்கு ஆதரவாக கருத்துக்களை முடக்கி அவருக்கு எதிராக வரும் கருத்துக்களை அதிகரிக்க முடியும்.
டிரம்ப்பைப் போலன்றி, எலான் அமெரிக்காவில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் மற்றும் நியூராலிங்க் போன்ற நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார். இவை தொழில்நுட்பம், விண்வெளி, இணையம் மற்றும் ஆற்றலை வடிவமைக்கின்றன. இவருக்கு உலக நாடுகள் சப்போர்ட் கிடைக்கும். ஏன் டெஸ்லா ஆலை சீனாவில் உள்ளதால் சீனாவின் ஆதரவு கூட கிடைக்கும்.
இளம் தலைமுறையினர் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் எலான் மஸ்கை ஒரு தொலைநோக்கு பார்வையாளராக பார்க்கிறார்கள். டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த காலத்தை நினைத்து வாழ்பவர்கள், ஆனால் எலானின் ஆதரவாளர்கள் எதிர்காலத்தை பற்றி கனவு காண்கிறார்கள். இது மஸ்க்கிற்கு இளைஞர்கள் ஆதரவு கிடைக்க வழி வகுக்கும்.
போட்டி தீவிரமடைந்தால் இனி என்ன நடக்கும்?
டிரம்ப், எலான் மஸ்கை ஒரு போலியான தேசபக்தர் என்று அழைக்கலாம் அல்லது ஜனநாயகக் கட்சியினருக்கும் சீனாவிற்கும் ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டலாம். மஸ்க் அமெரிக்கர் இல்லை என்று கூட டிரம்ப் கூட கூறலாம்.
எலான் பதிலுக்கு ஆன்லைனில் மீம்ஸ்கள், ட்வீட்கள் அல்லது டிரம்ப்பின் தோல்விகளை அம்பலப்படுத்தும் தரவுகளை வெளியிடலாம்.
டிரம்ப்பின் குழு அரசாங்க விதிகள் மூலம் எலான் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யலாம்.
டிரம்ப்பை எதிர்ப்பவர்களுக்கோ அல்லது மஸ்க்கின் பொருளாதார தொழில்நுட்பக் கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கோ எலான் மஸ்க் தனது பணம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி ஆதரவளிக்கலாம்.
இது பணம் Vs அரசாங்கம், சமூக ஊடகம் Vs தொலைக்காட்சி செய்தி, தொழில்நுட்பம் Vs பழமைவாதம் ஆகியவற்றிற்கான மோதலாக மாறலாம்.
யார் கையில் அதிகாரம்?
குறுகிய கால வெற்றியாளராக டிரம்ப் இருப்பார். ஏனெனில் அரசியல் அமைப்பு அவரது கையில் உள்ளது. கொள்கைகளை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியும்.
ஆனால் நீண்ட கால வெற்றியாளராக எலான் மஸ்க் இருப்பார். ஏனெனில் மக்கள் தினமும் பயன்படுத்தும் தளங்களை அவர் கட்டுப்படுத்துகிறார். எந்த வேட்பாளரையும் விட அதிகமான பணம் அவரிடம் உள்ளது. இளம் தலைமுறையினர் மற்றும் உலகளாவிய சிந்தனையாளர்களை அவர் கவர்ந்துள்ளார். தேர்தலில் போட்டியிடாமலேயே அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும்.
இதனால் இரண்டு பேருக்கும் இடையிலான மோதல் டிரம்பிற்கு சிக்கலாக மாறலாம். எதிர்காலத்தில் இல்லை.. ஜேடி வான்ஸ் இந்த 4 வருடத்திற்குள் அதிபரானால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications