எவ்வளவு அலங்காரம்.. எத்தனை வேகம்.. சீன அதிபர் வருகைக்காக கலக்கலாக மாற்றப்படும் சென்னை!
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து தற்போது சென்னையில் தீவிரமாக அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து தற்போது சென்னையில் தீவிரமாக அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

சென்னை எப்படி
இவரின் வருகையை அடுத்து தற்போது சென்னையை மிக தீவிரமாக தமிழக அரசு அலங்காரம் செய்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இறங்கும் ஜி ஜின்பிங் அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இதற்காக தற்போது சென்னை விமான நிலையமும், அந்த ஹோட்டலுக்கு செல்லும் சாலையும் சீரமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்
இந்த வழி முழுக்க தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. சாலை ஓரம் இருந்த பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டு சாலை மொத்தமாக சுத்தமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பகுதி முழுக்க புதிய விளக்குகள், புதிய வழிகாட்டும் பலகைகள், சாலை விதிமுறை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

எத்தனை மொத்தம்
இங்கு மொத்தமாக இருக்கும் ஸ்பீட் பிரேக்கர்கள் எல்லாம் நீக்கப்பட உள்ளது. அதேபோல் மெட்ரோ பாலங்கள் மீது ஓவியங்கள் வரையும் பணியும் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ பாலம் கீழ், பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் புல் தரைகள் தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கிண்டி
அதேபோல் சென்னை கிண்டி முதல் மாமல்லபுரம் வரை உள்ள சாலையும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் ஸ்பீட் பிரேக்கர்கள் நீக்கப்பட்டு, சாலையில் பேட்ச் போடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை முழுக்க புதிய புல் தரைகள் வைக்கப்பட்டு, பூச்செடிகள் அதில் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications