118 தேவையில்லை..117 இருந்தாலே போதும்! திடீரென மாறிய ‘மேஜிக் நம்பர்’! ஆனால் அதிலும் விஜய்க்கு சிக்கல்
சென்னை: தமிழக அரசியலில் பெரும் அதிர்வையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது தமிழக வெற்றி கழகம். 234 தொகுதிகளில் போட்டியிட்டு உள்ள அந்த கட்சி 108 தொகுதிகளை வென்றுள்ளது. அக்கட்சி ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் 118 உறுப்பினர்கள் தேவையில்லை இன்னும் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலே விஜய்க்கு போதும் என்பது குறிப்பிடத்தக்கது. அது எப்படி? விஜய்க்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்..
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் முழு தீவிரத்துடன் இறங்கியுள்ளார் விஜய்.
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், பெரும்பான்மை பெற இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது.

தற்போதைய சூழலில் குறைந்தது 10 முதல் 11 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக பல கட்சிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. முதல் வாய்ப்பாக பார்க்கப்படுவது காங்கிரஸ். 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட இந்தக் கட்சி, ஆட்சியில் பங்கு மற்றும் அமைச்சரவை வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆதரவு தரும் மனநிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளும் விஜய்க்கு எதிராக இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், அவர்களது ஆதரவும் கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இந்த அணியில் சேரும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தக் கட்சிகள் அனைத்தும் இணைந்தால், தேவையான எண்ணிக்கையை எட்டுவது சாத்தியமாகும்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி நிலைப்பாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. 4 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட இந்தக் கட்சி என்ன சொல்கிறது என்பது விஜயின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, அதிமுக நேரடி ஆதரவு வழங்கினால் எல்லாமே மாறிவிடும். ஆனால் எதிர்காலத்தில் ஆதரவை வாபஸ் வாங்கினால் ஆட்சி போய் விடும். இதனால் விஜய் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவார்.
மறுபக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை விஜய்க்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பே இல்லை. இந்த நிலையில், 118 என்ற "மேஜிக் எண்" விஜய்க்கு தேவையில்லை என்கின்றனர் விஜய் ஆதரவாளர்கள். இதுவரை ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்று பொதுவாகக் கூறப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அது 117 ஆக மாறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மை 118 என்பது சரியான கணக்கு தான். ஆனால் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், முதல்வராக பதவியேற்கும் முன் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 234 இலிருந்து 233 ஆக குறையும். அப்படி குறைந்தபின், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 117 ஆக மாறும்.
ஆனால் இந்த கணக்கிலும் இன்னொரு சிக்கல் இருக்கிறது. சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவுடன், அவர் கட்சியிலிருந்து விலகி நடுநிலையான நிலையை எடுப்பார். வழக்கமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வாக்களிக்க மாட்டார். இது தரப்பும் சம எண்ணிக்கை இருந்தா மட்டும் அவர் வாக்களிப்பார். இதனால், ஆட்சியை நிலைநிறுத்த குறைந்தது 117 உறுப்பினர்கள் உறுதியான ஆதரவு தேவைப்படும். இதனால் விஜய்க்கு 10ஐ விட 11 அல்லது 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications