தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே முக்கியம்.. இதுமட்டும் நடந்தால்.. திமுக செய்ய போகும் பெரிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் 2024ல் திமுகவிற்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வர தொடங்கி உள்ளன. இந்த கருத்து கணிப்புகள்படியே முடிவு வந்தால் அது திமுகவிற்கு பெரிய சாதனையாக இருக்கும். அதேபோல் தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் அது முக்கியமான சம்பவமாக இருக்கும்.

லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

Why 2024 Lok Sabha election can be record breaker for DMK alliance?

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0 வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா டுடே சர்வே; இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் சர்வேவில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும். கடந்த முறை 38 இடங்களில் வென்றது. இந்த முறை.. ரவீந்திரநாத் எம்பி வென்ற இடத்தையும் சேர்த்து 39 இடங்களிலும் திமுகவே வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வாக்கு வங்கி 47 சதவிகிதம் ஆக இருக்கும். பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது. ஆனால் வாக்கு வங்கி 15 சதவிகிதம் ஆக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வாக்கு வங்கி கூறப்படவில்லை. மாறாக "others" என்று கூறி.. மொத்தமாக மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 38 சதவிகிதம் என்று கூறப்பட்டு உள்ளது.

திமுக 30 + இடங்கள்: கணிப்பின்படி திமுக 30க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த கருத்து கணிப்புகள் படியே முடிவு வந்தால் அது திமுகவிற்கு பெரிய சாதனையாக இருக்கும். அதேபோல் தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் முதல்முறை ஒரு சம்பவம் நடக்கும்.

அதாவது தமிழ்நாட்டில் ஒரே கட்சியின் கூட்டணி வரிசையாக இரண்டு லோக்சபா தேர்தல்களில் 30க்கும் அதிகமான இடங்களை வெல்வது மிகவும் அரிதாக நடக்கும் விஷயம். முதல் மூன்று லோக்சபா தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி பெரிதாக இல்லை என்பதால் அதை தவிர்த்துவிட்டு பார்ப்போம்.

1967 லோக்சபா தேர்தலில் திமுக 25 இடங்களை வென்றது.
1971 லோக்சபா தேர்தலில் திமுக 23 இடங்களை வென்றது.
1977 லோக்சபா தேர்தலில் அதிமுக 17 இடங்களை வென்றது.
1980 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 20 இடங்களை வென்றது.
1984 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 25 இடங்களை வென்றது.
1989 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி 38 இடங்களை வென்றது.
1991 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், அதிமுக கூட்டணி 39 இடங்களை வென்றது.
1996 லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், திமுக கூட்டணி - 39 இடங்களை வென்றது.
1998 லோக்சபா தேர்தலில் அதிமுக என்டிஏ 30 இடங்களை வென்றது.
1999 லோக்சபா தேர்தலில் அதிமுக 26 இடங்களை வென்றது.
2004 லோக்சபா தேர்தலில் திமுக 39 இடங்களை வென்றது.
2009 லோக்சபா தேர்தலில் திமுக 27 இடங்களை வென்றது.
2014 லோக்சபா தேர்தலில் அதிமுக 37 இடங்களை வென்றது.
2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களை வென்றது.

இதில் 1989 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி 38 இடங்களை வென்றது அதை தொடர்ந்து அடுத்த வருடமே 1991 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், அதிமுக கூட்டணி 39 இடங்களை வென்றது.

அதேபோல் வேறு கட்சி எதுவும் லோக்சபா தேர்தலில் வரிசையாக அடுத்தடுத்து தேர்தலில் 30+ இடங்களை வென்றதே இல்லை. 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களை வென்றது.

இந்த நிலையில் இந்த முறையும் 30 + இடங்களை திமுக கூட்டணி வெல்லும் என்று கணிப்புகள் சொல்கின்றன. ஜெயலலிதா படைத்த ரெக்கார்டை இந்த முறை முறியடிக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+