வேன் மோதி மாணவன் மரணம்...64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்?- பள்ளிக்கு நோட்டீஸ்

64 வயது முதியவரை டிரைவராக நியமித்தது ஏன் என்று கேட்டு வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பணியாளர் நியமனம் செய்யாதது ஏன்? 64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்? என்பன உள்ளிட்ட 6 கேள்விகளுடன் பள்ளி நிர்வாகத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்த வெற்றிவேல்- ஜெனிபர் தம்பதியினரின் 7 வயது மகன் தீக்‌சித் ஆழ்வார்திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று காலை 8.40 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் சிறுவன் பள்ளிக்கு சென்றார். வேன் பள்ளி வளாகத்திற்குள் வந்ததும். வேனில் இருந்து தீக்‌சித் உள்ளிட்ட மாணவர்கள் இறங்கி வகுப்பு அறைக்கு சென்றனர். அப்போது மாணவன் திக்‌ஷித் வகுப்பு அறைக்கு செல்ல வேனுக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தான்.

மாணவன் மரணம்

மாணவன் மரணம்

அப்போது வேன் டிரைவர் வேனை, பின் நோக்கி இயக்கி வெளியே வாகனத்தை எடுத்து செல்ல முயன்றதாக தெரிகிறது. இதில் பின்னால் வகுப்பு அறைக்கு நடந்து சென்ற மாணவன் மீது எதிர்பாராத வகையில் வேன் மோதியது. மாணவனின் தலைமீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவன் உயிரிழந்தான். படுகாயமடைந்த மாணவன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டான்.ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவன் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

பெற்றோர்கள் குற்றச்சாட்டு

பெற்றோர்கள் குற்றச்சாட்டு

இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தாமதமாகவே தகவல் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொடர் பதற்றம் நீடிப்பதால் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அறிந்து பள்ளி வளாகத்தில் குவிந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தாயார் கண்ணீர்

தாயார் கண்ணீர்

இது தொடர்பாக சிறுவனின் தாயார் அளித்த பேட்டியில், 8.30 மணிக்கு பள்ளிக்கு குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பினேன் 8.40 மணிக்கு பள்ளியில் இருந்து மகனுக்கு விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கையில் வாய்,மூக்கு என உடல் முழுக்கு ரத்தமாக இறந்த நிலையில் இருந்தார் என்று கண்ணீர் மல்க கூறினார். பள்ளி தரப்பில் இதுவரை என்ன நடந்தது என்று ஒருவர் கூட சொல்லவில்லை. உணவு கூடையை விட்டு விட்டு சென்றதாகவும், தவறி விழுந்தாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கியுள்ளது.

15 நாட்கள் நீதிமன்ற காவல்

15 நாட்கள் நீதிமன்ற காவல்

பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பூங்காவனம், ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

6 கேள்விகளுடன் பள்ளிக்கு நோட்டீஸ்

6 கேள்விகளுடன் பள்ளிக்கு நோட்டீஸ்

இதனிடையே, மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பணியாளர் நியமனம் செய்யாதது ஏன்? 64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்? பள்ளி வாகனத்தில் இருந்து மாணவர்கள் இறங்கி சென்று விட்டார்களா என்பதை பள்ளி முதல்வர் உறுதி செய்யாதது ஏன்? பள்ளி தாளாளர் விபத்து நடைபெற்ற தகவல் கிடைத்தும் பிற்பகல் வரை பள்ளிக்கு வருகை புரியாதது ஏன் என்பது குறித்தும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவுடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு நேரடியாக பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+