Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் அஜீத்குமார் வாக்களிக்காதது ஏன்? பின்னணி காரணம் என்ன? தவித்த ரசிகர் பட்டாளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் அஜீத்குமார் வாக்களிக்க வராதது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

அஜீத் ஓட்டுப்போட வராததற்கு காரணம் அவர் ஊரில் இல்லை என்பதே தவிர மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாததால் அஜீத் ஓட்டுப்போட வரவில்லை என வழக்கம் போல் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜீத்குமார்

நடிகர் அஜீத்குமார்

நடிகர் அஜீத்குமாரை பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் தனது ஜனநாயக கடைமையை முதல் ஆளாக நிறைவேற்றுவார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கூட, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவிருந்த நிலையில் காலை 6.40 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று 20 நிமிடம் காத்திருந்து ஓட்டுப்போட்டுச் சென்றார். திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி வளகாத்தில் நடிகர் அஜீத் வாக்களிப்பது வழக்கம்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்நிலையில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் அஜீத்குமார் ஓட்டுப்போட வரவில்லை. பிற்பகல் வருவார், மாலை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவுக்கான நேரம் முடியும் வரை அவர் வரவில்லை. இதையடுத்து அஜீத் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவத் தொடங்கின. யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாததால் அஜீத் வாக்களிப்பதை தவிர்த்தார் என்றும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக அவர் வரவில்லை எனவும் வதந்திகள் வட்டமடித்தன.

மும்பையில் அஜீத்

மும்பையில் அஜீத்

இதனிடையே நடிகர் அஜீத்குமார் மும்பையில் இருப்பதால் அவரால் வாக்களிக்க வரமுடியவில்லை என்பதே சரியான காரணம் என்றும் மற்றவைகள் எல்லாம் உண்மையில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வாக்களிப்பதற்காக மும்பையில் இருந்து சென்னை வருவதற்காக திட்டமிட்ட நிலையில், கடைசிநேர திட்ட மாறுதலால் நடிகர் அஜீத்குமாரால் சென்னை வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கருப்பு சிவப்பு வண்ணத்தில் அஜீத் மாஸ்க் அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

 நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் அஜீத்குமாரை போலவே நடிகர் சிலம்பரசனும் விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பை சென்றிருப்பதால் அவரும் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+