Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவை தொடர்ந்து சீண்டிய நடிகர் சித்தார்த்.. திடீர் சைலண்ட் ஏன்? மற்ற நடிகர்கள் செயலால் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வந்த நடிகர் சித்தார்த், கடந்த சில மாதங்களாக அமைதியாக இருப்பது ஏன் என்பது குறித்து அவரே விளக்கமளித்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார்த். தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த இவரது நடிப்பில் டக்கர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

Why actor Siddharth get in social medias after criticising BJP?

இது தொடர்பாக யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நெறியாளர், "செயற்பாட்டாளராக சித்தார்த் மாறும்போது, அவரை நடிகராக பார்க்கும் சிலருடைய விமர்சனங்கள் என்னவாக உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், "செயற்பாட்டாளர் சித்தார்த்தாக மாறும்முன், நான் கல்லூரி படிக்கும்போதே செயற்பாட்டாளர்தான். மாணவர் அரசியலில் ஈடுபட்டு இருக்கிறேன். நாடகம் போட்டு உள்ளேன். எல்லாம் செய்து இருக்கிறேன். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் எல்லாம் பேசியவன்தான்.

சமீப காலமாக ஏன் மௌனம் காக்கின்றீர்கள் என்று கேட்கிறார்கள். நான் மவுனம் எல்லாம் காக்கவில்லை. முன்பைபோல் எல்லாவற்றுக்கும் பேசுவதை நிறுத்திவிட்டேன். அதற்கு காரணம், சுற்றி பார்த்தேன். நான் மட்டும்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நூறு நடிகர்களில் ஒருத்தன் மட்டும். நடிகர்கள் போராளி மாநாட்டில் சித்தார்த் மட்டும், அந்த மாதிரி இருக்கிறது.

சரி ஏதோ, நாம்தான் தவறு செய்கிறோமோ, அவர்கள் சரியாக இருக்கிறார்களா? என்று யோசித்தேன். எனவே நான் குறைத்துக்கொண்டேன். அக்கறை இருக்கிறதா என்றால், அக்கறை இருக்கிறது. ஆனால், என் தயாரிப்பாளர்கள் மீதும், என் தொழில் மீதும், என் குடும்பத்தின் மீதும், என்னுடைய மனநிலை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டேன். நாமும் பிழைக்க தெரிந்துகொள்வோம்.

சமூகத்தினால்தான் சினிமா வாழ்கிறது. ஆனால், அரசியல் தலைவர்கள் சினிமாவில் இருந்துதான் வரவேண்டும் என்ற கருத்தில் நான் முற்றிலுமாக முரண்படுகிறேன். சினிமாவில் இருந்து அரசியல் தலைவர்கள் வரலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஆனால், சினிமாவில் இருந்துதான் கட்டாயம் வரவேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை.

அடுத்த அரசியல் தலைவர் சினிமா என்று சொல்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு கிடையாது. நான் அரசியலுக்கு போக மாட்டேன். நான் சினிமாவில்தான் இருப்பேன். சினிமாவில் மக்கள் என்னுடைய கதாபாத்திரத்தை பார்த்து அன்பு செலுத்துகிறார்கள். அவர்கள் அந்த கதாபாத்திரத்தை கதாபாத்திரமாகவே பார்க்கலாம்.

கதாபாத்திரத்துக்கு இருக்கும் திறமைகள் எனக்கு இருப்பதாக அவர்கள் நினைப்பதில் உடன்பாடு இல்லை. எனக்கு அரசியல் அக்கறை இல்லை. ஒரு குடிமகனாக அக்கறை இருக்கிறது. அதில் முக்கியமான அக்கறை என்னவென்றால் 20 ஆண்டுகளாக நடிகனாக ரொம்ப நன்றாக சம்பாதித்து வாழ்கிறேன்.

என் வீட்டுக்கு இதுவரை ஒருமுறை கூட வரி தொடர்பாக ஒரு கேள்வி கூட வந்தது இல்லை. நான் அவ்வளவு நேர்மையாக வரி செலுத்துகிறேன். என்னுடைய முதல் கோரிக்கை என்னவென்றால் நீங்கள் அதிகமாக சம்பாதித்தால் வரி கட்டுங்கள். வரி கட்டாமல் இருக்க பத்தாயிரம் காரணங்கள் இருக்கலாம். வரி கட்ட ஒரேயொரு காரணம் போதும். அடுத்து வாக்களிக்கிறேன்.

இதை செய்தால் உங்கள் சித்தனையை வெளிப்படுத்தலாம். அதன்பின் உங்களை சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கலாம். அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்ற அக்கறை எனக்கு இல்லை." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+