'உண்டியலில் காசு போட்டதை' வடிவேலு நியாயப்படுத்தும் காமெடி வீடியோ-சோசியல் மீடியாவில் செம்மையாக ஷேர்!
சென்னை: சோசியல் மீடியாவில் உலா வரும் நெட்டிசன்களுக்குதான் எங்கிருந்து உடனுக்குடன் வீடியோக்கள் கிடைக்குமோ தெரியலை.. அன்றாட நிகழ்வுகளுக்கு ஏற்ப சுடச் சுட வீடியோக்களை பகிர்ந்து தள்ளுகின்றனர்.
அப்படி ஒரு வீடியோதான், உண்டியலில் காசு போட்டதை நியாயப்படுத்தும் வகையில் நடிகர் வடிவேலு பேசுகிற நகைச்சுவை காட்சி. அந்த காட்சியில் அர்ச்சகர் ஒருவருக்கும் வடிவேலுக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது.

" ஏன்டா என் தட்டுல இருந்து காசு எடுத்த?"
"காசு எடுத்து பையிலயா போட்டேன்.. பகவானுக்குதான் போட்டேன்"
"என் காசை எடுத்து உண்டியலில் போடுறதுக்கு நீ யாருடா கட்டையில போறவனே"
"உன் காசுன்னு எவன்யா சொன்னான்.. என்னை மாதிரி 10 பக்தர்கள் போட்ட காசு"
"10 பைசா பாக்கி இல்லாம எல்லாத்தையும் தூக்கி உண்டியலில் போட்டா என் வயித்துக்கு என்ன பண்றது"
"பெரிய வயிறு.. வயிறு... உடைக்கிற தேங்காய கொண்டு போயிடற, அவிக்கிற சுண்டலையும் கொண்டு போயிடற.. அதான் மாச மாசம் சம்பளம் தருவாங்கல்ல.. அப்புறம் ஏன் தட்டுல போடுற காணிக்கையையும் கொண்டு போற... பகவானுக்கு எடுத்துப் போட்ட காசையா பழிக்கிற நீ.. திருப்பி வருவேன்.. தட்டுல காசு இருந்தா மறுபடியும் எடுத்து போடுவேன்.. இஷ்டமில்லைன்னா வேற வேலைக்கு போ"
இப்படியான 0.31 செகண்ட் வீடியோதான் இன்றைக்கு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக ரெக்கை கட்டிப் பறக்குது!
காரணம் என்ன?: தூத்துக்குடி வெள்ள பாதிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது ஶ்ரீ வைகுண்டம் பெருமாள் கோவில் பிரச்சனை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார் நிர்மலா சீதாராமன். இந்த ஆலோசனையின் போது பக்தர் ஒருவர், ரூ30,000 தர தாம் தயாராக இருப்பதாக கூறினார். உடனே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு, அந்த பணத்தை உண்டியல்ல போடாதப்பா.. எங்க கொடுக்கனுமோ அங்க கொடுங்க என கூறினார். இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications