மாஸ் ஹீரோ ஆகிட்டாரே.. கைக்கு வந்த ரிப்போர்ட்.. சிவகார்த்திகேயனுக்கு குழி பறிக்கும் விஜய் ஃபேன்ஸ்?
சென்னை: மாஸ் ஹீரோக்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். பல நடிகர்களோடு நடிகர்களாக இருந்துவிட்டு போவார் என்றுதான் இவரின் மெரினா படம் பார்த்த பலரும் நினைத்தனர். ஆனால் வரிசையாக இவர் கொடுத்த ஹிட் படங்கள் தமிழ்நாடு முழுக்க கவனம் பெற வைத்தது.,.

முக்கியமாக எதிர்நீச்சல் படம் காரணமாக இவர் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாகவே உருவெடுத்தார். அட நம்ம வீட்டு பையன் மாதிரியே இருக்காரு.. நல்லாவும் நடிக்கிறாரே என்று ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு உயர்ந்தார். அதன்பின் சில தோல்வி படங்கள், சில ஹிட் படங்கள் என்று மாறி மாறி நடித்தார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்.. வரிசையாக தனது காமெடியான நடிப்பு, டான்ஸ் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்தார். முக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பெரிய அளவில் குடும்பங்கள் மத்தியில் கவனம் பெற்றார். இடையே இடையே மான் கராத்தே , சீம ராஜா போன்ற தியேட்டரிலேயே தூங்க வைக்கும் படங்களை வெளியிட்டு இருந்தாலும் கூட லைம் லைட்டிலேயே இருந்தார்.
நடிகர் விஜய் கூட.. புடிச்சிட்டாரு.. குழந்தையை பேன்ஸை எல்லாம் புடிச்சிட்டாரு என்று சொல்லும் அளவிற்கு சிவகார்த்திகேயன் மிகவும் சிறப்பாக நடித்தார். இந்த நிலையில்தான் மாஸ் ஹீரோக்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதற்கு, சிவா நடித்து வெளிவந்துள்ள மாவீரன் படத்தின் தியேட்டர் விற்பனையே சாட்சி என்கிறார்கள். இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த படம் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட படமாக, சிவகார்த்திகேயன் அதிகம் நம்பும் படமாக இது பார்க்கப்படுகிறது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு மற்றும் வாய்ஸ் கொடுத்த விஜய்சேதுபதி என்று பெரிய டீம் இந்த படத்திற்காக வேலை செய்துள்ளது.
தியேட்டர் விற்பனை மட்டுமே 110 முதல் 130 கோடி வரை விற்பனையாகியிருக்கிறதாம். சேட்டிலைட் வணிகத்தையும் சேர்த்தால் அது 190 முதல் 200 கோடி வரை விற்பனை கணக்கு கூடும் என்றும் தியேட்டர் தரப்பிலிருந்து தகவல் கிடைக்கிறது. இந்த உண்மைகளை அறிந்துள்ள நடிகர் விஜய் ரசிகர்கள், சிவகார்த்திக்கேயனை சீண்டும் வகையில், 'என்னடா படம் இது ? ' என சோசியல் மீடியாக்களில் பரப்பத் தொடங்கி விட்டனர்.
படத்தின் முதல் காட்சியே இன்று 9 மணிக்குத்தான் துவங்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே, எதை வைத்து படத்தை மதிப்பீடு செய்தார்கள் ? சிவகார்த்திக்கேயனை கண்டு விஜய் ரசிகர்கள் பயப்படுகிறாரார்களா? அப்படி பயப்படுவதால் தான் இப்படி சீண்டிப் பார்க்க நினைத்து சோசியல் மீடியாக்களில் பரப்புகிறார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள்.
முக்கியமாக பிரபல செய்தி நிறுவனங்களின் பெயரில் பொய்யான கணக்கை தொடங்கி இப்படி செய்து வருகின்றனர். ஒரு பக்கம் விஜய் மனைவி சங்கீத விஜய் முதல் நாள் முதல் காட்சியை இந்த படத்திற்கு பார்க்க சென்றுள்ளார். விஜயோ இந்த படம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது இரவு நேர கல்வி நிலைய பணிகளில் பிசியாக இருக்கிறார். ஆனால் அவர் ரசிகர்களோ விஜயின் இடத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்று விஜய்க்கு தெரியாமலே இப்படி சிவாவை சீண்டுகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
-
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications