பிரபல நடிகை குட்டி பத்மினி பாஜகவில் இருந்து விலகினார்.. காரணமே இதுதான்.. மேலிடத்துக்கு பறந்த லெட்டர்
பாஜகவில் இருந்து நடிகை குட்டி பத்மினி விலகினார்
சென்னை: பிரபல நடிகை குட்டி பத்மினி பாஜகவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.. இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் பாஜக மேலிடத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
நடிகை குட்டி பத்மினி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே தமிழக மக்களுக்கு நெருக்கமானவர்.. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, ஜெய்சங்கர் உட்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்...
இவரது அம்மாவும் புகழ்மிக்க நடிகை என்பதால், எப்படியும் ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், பெரும்பாலான படங்களில் கேரக்டர் நடிகையாகவே நடித்தார்..

விருதுகள்
அவைகளிலும் நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார்.. நண்டு உட்பட பல்வேறு படங்களில் துணை நடிகையாகவும் நடித்தன்மூலம் நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார்.. அத்துடன், அன்றைய காலங்களில் ஆண்களே கோலோச்சியிருந்த சின்னத்திரைகளில், துணிச்சலுடன் நுழைந்தவர் குட்டிபத்மினி.. ஏராளமான தொடர்களை தயாரித்து அதிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்தவர்.

மோடி ஆட்சி
தற்போதுகூட, ஒரு யூடியூப் சேனலை சொந்தமாக ஆரம்பித்து, இயல்பாகவும், யதார்த்தமாகவும் பேசி மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார்.. இப்படி பல்வேறு துறைகளில் பிஸியாக வலம்வந்து கொண்டிருந்த குட்டிபத்மினிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது.. கடந்த 2014-ஆம் ஆண்டில் மத்தியில் மோடி ஆட்சி வந்த பிறகு, தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் பணிகள் வேகம் பிடிக்கத் தொடங்கின...

கலைஞர்கள்
அப்போது பல கலைஞர்கள், விரும்பியே பாஜகவில் இணைந்தனர்... மேலும், சினிமாவில் உள்ள பிரபலங்களை தேடி பிடித்து, கட்சிக்குள் இழுக்கும் முயற்சியும் கட்சி சார்பில் நடந்தது.. குறிப்பாக, பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதில் இருந்தே, தமிழக பாஜகவில் ஏராளமான விஐபிக்கள், பிரபலங்கள், இணைந்தனர்.. நிறைய உறுப்பினர்கள் சேர்ந்ததும் முருகன் பொறுப்பில் இருந்தபோதுதான்.. கட்சியும் மெல்ல வளர தொடங்கியதும் முருகன் பொறுப்பில் இருந்தபோதுதான்..

விபி துரைசாமி
திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி முதல் குஷ்பு வரை தன்னுடைய கட்சிக்கு இழுத்து வந்த பெருமை முருகனுக்கே சாரும். அதேபோல, கட்சியில் இணைந்ததுமே அவர்களுக்கு பதவியும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.. அந்த வகையில், விபி துரைசாமி, நமிதா, குட்டி பத்மினி போன்றோருக்கு கட்சியில் பதவிகள் வழங்கப்பட்டன. குட்டி பத்மினிக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. .. இவர், 2014-ம் ஆண்டில் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர் ஆவார்..

குட்டி பத்மினி
கட்சியில் இணைந்தபோதும் சரி, பதவி கிடைத்த பிறகும்சரி, குட்டி பத்மினி கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக செயல்படாமலேயே இருந்தார். அதன்படி 2014-ஆம் ஆண்டில் நடிகை குட்டி பத்மினி அன்றைய தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் குட்டி பத்மினி இணைந்தபோதும், கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக செயல்படாமலேயே இருந்தார்... ஆனால், பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில், துணிச்சலாகவும், அதிரடியாகவும் பேட்டி தந்திருந்தார் குட்டிபத்மினி.

பாஜக குட்டி பத்மினி
எனினும், 7 ஆண்டுகளாக பாஜகவில் குட்டி பத்மினி இருந்து வரும் நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக குட்டி பத்மினி தமிழக பாஜகவுக்கு தலைமைக்குக் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் உள்ளதாவது: "பாஜகவில் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன். என்னுடைய சொந்தப் பணிகள் அனைத்தும் மும்பையில் இருப்பதால், அரசியல் பணிகளுக்கு என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை.

பாஜக மேலிடம்
மேலும் அரசியல் என்பது எனக்கானது அல்ல என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் எப்போதும் பாஜகவின் நலம் விரும்பியாக இருப்பேன்" என்று கடிதத்தில் குட்டி பத்மினி கூறியுள்ளார்... ஆனால், இதே பாஜகவில் குஷ்பு, காயத்ரி ரகுராம், ராதாரவி போன்றோர் ஆக்டிவ்வாக இருந்து வரும் நிலையில், சரவணபவன் ஜீவஜோதி, கலா, நமீதா, ஷகீலா இப்படி எத்தனையோ நடிகைகள், நடிகர்கள் பெரிய அளவில் கட்சி செயல்பாடுகள் இல்லாமல் இருக்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications