'இது மாதிரி பல சம்பவங்கள் நீங்க பண்ணியிருக்கீங்க'.. கூல் சுரேஷை பங்கமாய் கலாய்த்த பூர்ணிமா ரவி
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகர் கூல் சுரேஷ், பல சம்பவங்களை செய்திருக்கிறார். அவர் செய்த சில சம்பவங்களே இன்று அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. நடிகை பூர்ணிமா ரவியை தியேட்டரில் வைத்து விமர்சித்த கூல் சுரேஷ், இன்று அதற்காக அவரிடமே சிக்கி சின்னபின்னமாகி உள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். வயதானவர்கள் குறைவாகவும் இளைஞர்கள் , நடிகைகள் அதிகமாகவும் இந்த முறை பங்கேற்றுள்ளனர்.

இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் கூல் சுரேஷ், பிரபல யூடியூப்பரான பூர்ணிமா ரவி, நடிகை ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி , வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் வனிதா விஜயகுமாரின் மகளுமான ஜோவிகா முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கையும், நடனக் கலைஞருமான ஐஷூ, நடிகர் விஷ்ணுவிஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம், பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் , நடிகை விசித்ரா, எழுத்தாளர் பவா செல்லத்துரை, விஜய் வர்மா உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் அதிகப்படியான மக்களால் விமர்சிக்கப்படும் நபராக கூல் சுரேஷ் இருக்கிறார். முன்பு ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியை 'எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு' என்று மோசமாக விமர்சித்தார். இன்று அதே பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் நுழைந்து இருந்ததால் பலர் ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் அடுத்த சம்பவமாக கூல் சுரேஷ் ஒரு முறை தியேட்டர் வாசலில் நின்று கத்தியபடி பேசிக்கொண்டிருப்பார். அப்போது நடிகை பூர்ணிமா ரவி காரில் போய் கொண்டிருப்பார். இதை கவனித்த கூல் சுரேஷ் திடீரென டென்சன் ஆகி மேகராவை காருக்கு கொண்டு போங்க.. மைக்கை நீட்டுங்க என்று கூறியபடி, நடிகையை மடக்கி நிறுத்திவைத்து, பேசுகையில், நான் என்ஜாய் என்ற படத்தினை பார்ப்பதற்காக தியேட்டருக்கு வந்திருக்கிறேன்.. நான் உயிரை கொடுத்து கத்திக்கொண்டிருக்கிறேன்..
இந்த பொண்ணு கார்ல போறாங்க.. காரை நிறுத்தி சார், ஹாய் சார், ஹவ் ஆர்யூ சார் என்று கேட்கலாமே.. இது தான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. படத்துக்காக நான் சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. நடிச்சவங்க கார்ல போவாங்க.. கத்துன நான் தெருவுல நிற்கனுமா என்று கேட்பார்..
இது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பூர்ணிமா ரவி, நடிகர் கூல் சுரேஷிடம் நேரடியாகவே கேட்டுள்ளார். இதுபற்றி பூர்ணிமா ரவி கூறும் போது, அன்று ஒரு நாள் நான் காரில் போய்கொண்டிருந்தேன்..சம்பந்தமே இல்லாமல் என் கார் கதவை திறந்து பேசிக்கொண்டிருந்தீங்க.. என்று கேட்டார். அதற்கு கூல் சுரேஷ் திருதிருவென விழித்தார்.அப்போது நடிகை பூர்ணிமாரவி, சரி ஓகே விடுங்க.. இது மாதிரி பல சம்பவங்கள் நீங்க பண்ணியிருக்கீங்க.. என்றார்.
அப்போது தான் கூல் சுரேஷ் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தவராய் ஆமாம் என்று பேசுவார்.இந்த காட்சியை மட்டும் கட் செய்த நெட்டிசன்கள், கூல் சுரேஷை விமர்சித்து வருகிறார்கள். இவர மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பிக் பாஸ் சரியான இடம்தான் கொஞ்சநாச்சும் திருந்தி வருவாங்க... என்று கூறினார்கள்..
இவன மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பிக் பாஸ் சரியான இடம்தான் கொஞ்சநாச்சும் திருந்தி வருவாங்க... pic.twitter.com/RgNPmSkoGq
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) October 5, 2023
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications