ஆளுமைக்கு என்னாச்சு? லெட்டர் பேட் கட்சிகளின் கூட்டணிக்கு காத்திருக்கும் அதிமுக? எடப்பாடியா இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அதிமுக கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சொதப்பி வருகிறது.

ஆளும் திமுக எப்போதும் போல வேகமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தற்போது தொகுதிகளை தேர்வு செய்ய தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

Why AIADMK Edappadi Palanisamy is failing in the alliance talks

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1
கொமதேக - 1

பாஜக கூட்டணி: இன்னொரு பக்கம் பாஜகவும் முக்கியமான சில கட்சிகளை கூட்டணிக்கு இழுத்துவிட்டது. பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதில் அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 4 லோக்சபா சீட் என்று பாமக கேட்டுள்ளதாம்.

இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

இது போக பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று முதல்நாள் நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக நிலைமை: ஆனால் அதிமுக தமிழ்நாட்டில் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் அதிமுக கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சொதப்பி வருகிறது.

தேமுதிகவுடன் அந்த கட்சியின் பேச்சுவார்த்தை இன்னும் வெற்றிபெறவில்லை. பாமகவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து.. தற்போது பாமக பாஜக பக்கம் சென்றுவிட்டது. காங்கிரஸ், விசிகவை கூட்டணிக்கு இழுக்க முடியவில்லை.

இதனால் வேறு வழியின்றி மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி உடன் எல்லாம் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிலும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்ததன் பேரிலேயே நான் அங்கு சென்றேன் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் இன்று தெளிவுப்படுத்தியுள்ளார். அதிமுக கட்சி அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

ஆட்சி காலத்தின் போது எடப்பாடியை கட்சியினர் பலரும் ஆளுமை என்று அழைத்த காலங்கள் உண்டு. ஆனால் அவரே இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் பின்னடைவை சந்தித்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+