Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஏஏ-வுக்கு எதிராக வாயே திறக்காத இபிஎஸ்.. குழம்பிய அதிமுக?.. சட்டசபையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே இன்று அவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அவையில் தீர்மானம் தாக்கல் செய்யும் முன்பாகவே அதிமுக இப்படி வெளிநடப்பு செய்ததை முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இன்று சபையில் அப்படி என்னதான் நடந்தது என்று பார்க்கலாம்..

தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏ சட்டம் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது. மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்குவது என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இலங்கை தமிழர்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது. மனித அடிப்படை உரிமைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான சட்ட திருத்தம் இது என்று கூறி முதல்வர் ஸ்டாலின் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக அவையில் பேசினார்.

அதிமுக

அதிமுக

இன்று சட்டசபையில் அதிமுக அவை விவாதங்கள் தொடங்கும் முன்பே அமளியில் ஈடுபட்டது. பேரவையில் அதிமுகவின் கே.பி.முனுசாமி இன்று அவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு எதிரான மசோதா குறித்து பேச முயன்றார். கடந்த வாரமே இந்த மசோதா குறித்து அமளி நடந்து, அதிமுகவினர் வெளியேறி, சாலை மறியல் செய்து கைதானது வேறு கதை. ஆனால் இன்று மீண்டும் அதிமுக தரப்பு அதே ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டது. இதனால்தான் சபையில் சில நிமிடம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

பேச அனுமதிக்கவில்லை

பேச அனுமதிக்கவில்லை

சபையில் எங்களை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. எங்களின் முக்கியமான கோரிக்கையை சபாநாயகர் கேட்கவில்லை என்று கே.பி.முனுசாமி குறிப்பிட்டார். இதை தொடர்ந்தே அவை விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளியேறியது. அதிமுக சரியாக முதல்வர் ஸ்டாலின் சிஏஏ சட்டம் குறித்து விவாதிக்கும் முன்பும் சட்டத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பும் வெளியேறியது. அதிமுக அவையை விட்டு வெளியேறும் வரை சிஏஏ குறித்து எதுவும் பேசவில்லை.

அனுமதி தரவில்லை

அனுமதி தரவில்லை

இன்று சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து அவையை திமுக கூட்டியது. இதனால் பழைய விஷயங்களை பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. முக்கியமாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து கடந்த வாரமே எல்லாம் விவாதிக்கப்பட்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதனால் இன்று அதை பற்றி அதிமுக பேசுவதை சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

சிஏஏ

சிஏஏ

சிஏஏ சட்டம் குறித்து ஒரு வார்த்தை கூடபேசாமல், அதை எதிர்க்கவோ, ஆதரிக்கவோ இல்லாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது. வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எங்களின் கோரிக்கைகளை பேச அனுமதி தரவில்லை. நாங்கள் நியாயமாக பேச நினைத்த விஷயங்களை சபையில் பேச அனுமதிக்கவில்லை. இதனால் வெளியேறிவிட்டோம் என்று குறிப்பிட்டார். வெளியே பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமியும் சிஏஏ சட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

சபாநாயகர்

சபாநாயகர்

அதிமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல்.. சம்பந்தம் இல்லாமல் ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்து பேசி, அதை காரணம் காட்டி அவையில் இருந்து வெளியேறியதாகவும். சம்பந்தம் இல்லாத விஷயத்தை பேச, சிஏஏ விவகாரத்தை புறக்கணித்ததாகவும் திமுக தரப்பு விமர்சனம் வைத்துள்ளது. இதனால்தான் சபாநாயகர் அப்பாவுவும்.. நீங்கள் நல்ல காரணம் ஒன்றை சொல்லிவிட்டு வெளியேறி இருக்கலாம்.. இதை ( ஜெயலலிதா பல்கலைக்கழகம்) காரணம் காட்டி வெளியேறுவது நம்பும்படியாக இல்லை என்று விமர்சனம் வைத்தார்.

 பாஜக

பாஜக

அதிமுக இன்று அவையில் இருந்து வெளியேறிய பின்புதான் பாஜக வெளியேறியது. பாஜக வெளிப்படையாக தீர்மானத்தை எதிர்த்தது. சிஏஏ மசோதா யாரையும் மத ரீதியாக பிரிக்கவில்லை. இந்த சட்டத்தை எதிர்ப்பது தவறு, தமிழ்நாடு அரசின் இந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது, தீர்மானத்தை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி பாஜக உறுப்பினர்கள் அதிமுகவிற்கு அடுத்தப்படியாக வெளிநடப்பு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+