தங்கம், வைர நகைகள் மாயம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பணியாளர் மீது சந்தேகம் ஏன்? பரபரப்பு தகவல்கள்
தங்கம், வைர நகைகள் மாயம்- ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பணியாளர்கள் மீது சந்தேகம் ஏன்
சென்னை: தங்கம், வைர நகைகள் மாயமான நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பணியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது எதனால் என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.
தமிழில் 3 , வை ராஜா வை உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குநரானார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுஷை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது தந்தையின் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். தற்போது அவர் விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

60 பவுன் நகைகள்
இந்த நிலையில் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு எனது தங்கை சவுந்தர்யாவின் திருமணத்திற்கு பின்பு 60 சவரன் நகை, வைர நகைகளை லாக்கரில் பூட்டி வைத்திருந்தேன்.

ஆழ்வார்பேட்டை
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தனர். பின்னர் முன்னாள் கணவர் தனுஷுடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறிய போது அங்கும் லாக்கர் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனில் குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது.

போயஸ் தோட்டம்
கடந்த மாதம் போயஸ் தோட்டம் வீட்டின் லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்கம், வைரம், ரத்தினம் பதித்த நகைகள் காணாமல் போயுள்ளது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளது. நான் லாக்கரின் சாவியை எங்கே வைப்பேன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு தனது புகாரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தாமத புகார் ஏன்
இவர் 3 வீடுகளில் மாறி மாறி இருந்துள்ளதால் அங்குள்ள பணியாளர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் நகைகள் காணாமல் போன நிலையில் தற்போது புகார் கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வியை போலீஸார் கேட்டு அவர்களுக்கு ஐஸ்வர்யாவின் பதில் என்னவாக இருக்கும் என தெரியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications