"அரசியலில் குதிக்கிறாராம் நடிகர் அஜித்.." எப்படி கோர்த்துவிட்டுருக்காங்க பாருங்க!
சென்னை: அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானதை வைத்து அவர் அரசியலுக்கு வருகிறார் என ஜெயலலிதாவின் பிஏ பூங்குன்றன் போட்ட பேஸ்புக் பதிவு வைரலாகி வந்தது.
அஜித் அரசியல் சாயம் தன் மீது பூசாமல் இருக்க சினிமா படங்களில் கூட அரசியல் சார்ந்த கதாபாத்திரங்களை ஏற்பதில்லை. இது அனைவரும் அறிந்ததே. அது போல் அஜித் தனது ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார்.
அது போல் அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை கூறிய போதே அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை அஜித் வெளியிட்டிருந்தார்.

அரசியல் கட்சி
அதில் எந்த அரசியல் கட்சிகளும் தனது பெயரை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அது அண்மையில் தல என்ற பெயரிட்டு அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். எனவே அஜித்தை பொருத்தவரை அரசியலுக்கு அவர் வருவதற்கு சாத்தியமே இல்லை என்பது நன்றாக தெரிந்துவிட்டது. எனினும் தற்போது அஜித்தின் அரசியல் வருகை குறித்து பேசப்படுகிறது.

ஜெயலலிதா பிஏ
இதற்கு காரணம் ஜெயலலிதாவின் பிஏ பூங்குன்றம் போட்ட பேஸ்புக் போஸ்ட்தான். அதில் புரட்சித் தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார். அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா, அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. அஜித் விரைவில் அரசியலும் வருவார் என்று கூறியிருந்தார்.

இணையதளத்தில்
இது இணையதளத்தில் பரவிய நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மரியாதைக்குரிய ஊடக உறுப்பினர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

அஜித் அரசியலுக்கு வருகிறார்
அஜித் அரசியலுக்கு வருகிறார் என பூங்குன்றன்போட்ட போஸ்டிற்கு காரணம் அஜித்தின் வலிமை படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியானதுதான். அந்த தேதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அது போல் அவர் இறந்த டிசம்பர் 5ஆம் தேதி வலிமை படத்தின் அம்மா பாடல் வெளியானது. இவையெல்லாம் சேர்ந்து அஜித் ஜெயலலிதாவின் மீது மரியாதை கொண்டவர் என்பதால் அவர் அதிமுக தொண்டர்களை அரவணைக்க விரும்பி அரசியலுக்கு வருகிறார் என்ற ஒரு பேச்சு அடிப்ட்டது.

பிப்ரவரி 24-ஆம் தேதி
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஏன் அம்மா பாடல் வெளியானது என தெரியவில்லை. ஆனால் பிப்ரவரி 24-ஆம் தேதி போனி கபூரின் மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவியின் நினைவு தினம். இதனால் ஒரு சென்டிமென்ட்டாக அன்றைய தினம் வலிமை படம் போனி கபூரால் வெளியாகியிருக்கும். இதைவிட்டுவிட்டு பிப்ரவரி 24 இல் ஜெயலலிதா பிறந்தநாள். அதனால்தான் அன்றைய தினம் வலிமை படம் வெளியானது, அஜித் அதிமுக தொண்டர்களை அரவணைக்க அரசியலுக்கு வருகிறார் என்றெல்லாம் முடிச்சி போட்டா எப்படிங்க?
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications