ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏவான, ஆளூர் ஷாநவாஸுக்கு இந்த முறை சீட் வழங்கபடாதது, விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதற்கான காரணம் குறித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
விசிகவில், திருமாவளவனுக்கு அடுத்து இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு ஆளூர் ஷநவாஸின் வளர்ச்சி இருந்தது. மேடைகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் இவரின் பேச்சு தெறியாக இருக்கும். இப்படி இருந்தும், ஏன் சீட் மறுக்கப்பட்டது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

நாகப்பட்டினத்தில் போட்டியிட விருப்பம் இல்லை
இந்நிலையில், திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, "நாகப்பட்டினம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தால் நிச்சயம், ஷாநவாஸுக்குதான் அதை கொடுத்திருப்பேன். ஆனால், நாகப்பட்டினம் நமக்கு கிடைக்கவில்லை. விசாரித்தபோது, ஷநவாஸ் நாகையில் போட்டியிட விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. வேறு எந்த தொகுதியை விரும்புகிறார் என்று விசாரித்தபோாது, ராயபுரம் விரும்புகிறார் என்று தகவல்கள் கிடைத்தன.
ராயபுரத்தை கேட்ட ஷாநவாஸ்
இடையில் ராயபுரத்தை கேட்டபோது, ஆளூர் ஷநவாஸ் அதை மறுத்துவிட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பின்னர் பல்லாவரம் கேட்டிருந்தார். ஆனால், அது தேமுதிகவின் கைகளுக்கு போய்விட்டது. ஒருவேளை பல்லாவரம் கிடைத்திருந்தால், அது ஷாநவாஸுக்கு போயிருக்கும். மறுபுறம் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் தலையிட்டிருந்தார். எனவே அவசர கதியில், யார் யார் எந்தெந்த தொகுதியை கேட்கிறார்களோ கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார்.
தொகுதி ஓதுக்கீடு
அதனால்தான் நாம் அவ்வளவு தூரம் கேட்டும், கிடைக்காமல் இருந்த கள்ளக்குறிச்சி தொகுதி இந்த முறை கிடைத்திருக்கிறது. அரக்கோணமும் அப்படித்தான். பல்லாவரத்தை கொடுத்த நிலையில், பன்ருட்டியை கொடுத்தார்கள். இதில், நாங்கள் ஒரு இஸ்லாமியரை நிற்க வைப்பது என்று முடிவாகியிருந்தது. அப்படியெனில், நிச்சயம் ஷாநவாஸ்தான் நிற்க வைக்கப்படுவார் என்று இருந்தது.
என் இந்த முடிவு?
ஆனால், அப்துல் ரஹ்மான் மீண்டும் மீண்டும் தனக்கான வாய்ப்பை கேட்டிருந்தார். எனவே, ஷாநவாஸிடம் சொல்லிக்கொள்ளலாம், இந்தமுறை அப்துல் ரஹ்மானுக்கு கொடுக்கலாம் என்று நான் சுயமாக சிந்தித்து முடிவெடுத்தேன். மேலோட்டமாக பார்த்தால் இந்த முடிவு தவறானதாக இருக்கலாம். இந்த முடிவு தவறானதாகவே இருக்கட்டும்.
ஆனால், ஷாநவாஸ் கூடாது என்று எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. அப்துல் ரஹ்மானுக்கு வாய்ப்பு என்கிற அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது. இதில் வேற எந்த உள்நோக்கமும் கிடையாது" என்று கூறியிருக்கிறார்.
-
திருமாவிடம் அந்த கேள்வியை.. தனியாக போன் போட்டு கேட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? இவ்வளவு நடக்குதா? -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?













Click it and Unblock the Notifications