"கவுண்டருக்கு ரெடியாகுங்க".. கவனம் பெற்ற அண்ணாமலையின் இலங்கை பயணம்.. பதிலடிக்கு ரெடியாகும் திமுக?
சென்னை: பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் கவனம் பெற்றுள்ள நிலையில் ஆளும் திமுக தரப்பு இதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கையின் பொருளாதாரம் மேலும் சரிவை சந்திக்கும் என்றே ஐஎம்எப் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவ தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. இலங்கைக்கு மத்திய அரசு வழியாக தமிழ்நாடு அரசு உதவ முடிவு செய்துள்ளது. இந்த உதவியை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை டிரிப்
இந்த நிலையில்தான் இலங்கைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் உழைப்பாளர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை கடந்த 30ம் தேதி இலங்கை சென்றார். இலங்கையில் மலையக தமிழர்கள், மீனவர்கள் உடன் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார். அங்கு இருக்கும் சீதா கோவில் உட்பட இந்து கோவில்கள் பலவற்றில் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார்.

வரவேற்பு
இலங்கையின் பொருளாதார நிலையை முன்னிட்டு அங்கு இருக்கும் தமிழர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை அண்ணாமலை வழங்கினார். இந்த பயணத்தில் அண்ணாமலைக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு இருந்த மலையக தமிழர்கள் மூலம் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பது கொடுக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் தின நிகழ்விலும் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

உறுதியாக சொன்னார்
இந்த சந்திப்பு, பயணம் முழுக்க இலங்கை தமிழர்களிடம் பாஜக உங்களுடன் இருப்பதாக அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக கூறினார். தமிழ்நாடு அரசு இலங்கைக்கு உதவ முன் வந்துள்ள நிலையில்தான் அண்ணாமலை, அழுத்தம் திருத்தமாக மத்திய பாஜக இலங்கைக்கு உதவுவதாக கூறினார். பிரதமர் மோடி தங்கள் உதவியின் மூலம் சஞ்சீவி மழையை இங்கே அனுப்பி இருக்கிறார் என்று அண்ணாமலை பல இடங்களில் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களை கவரும் வகையில் அண்ணாமலை இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

கோவில் வழிபாடு - சிக்னல்
தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பெரிதாக போருக்கு பின்பாக இலங்கைக்கு செல்லவில்லை. இலங்கையில் பெரிதாக தமிழ்நாடு தலைவர்கள் செல்லாத நிலையில்தான் அண்ணாமலை சென்றுள்ளார். அதோடு அங்கு இருக்கும் இந்து கோவில்களில் வழிபாடு நடத்தியது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. புத்த மதம் பெரும்பான்மை உள்ள இலங்கையில் சிறுபாண்மையினர் இந்துக்களுக்கு ஆதரவான முன்னெடுப்பாக அண்ணாமலையின் பயணம் பார்க்கப்படுகிறது.

மீனவர்கள்
அதேபோல் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களுடன் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார். அங்கு இருக்கும் தமிழக மீனவர்களுடன் பேசி குறைகளை கேட்டறிந்தார். பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் கவனம் பெற்றுள்ள நிலையில் ஆளும் திமுக தரப்பு இதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலைக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கப்படும் என்று ஆளும் திமுக வட்டாரங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video

எதிர்பார்க்கவில்லை
இலங்கை மீதும், இலங்கை தமிழர்கள் மீது பாஜக திடீரென கவனம் செலுத்துவதை திமுக தரப்பு கவனித்து வருகிறது. பாஜகவின் இந்த மூவிற்கு பின் என்ன காரணம் என்று ஆளும் திமுக வட்டாரம் விசாரித்து வருகிறதாம். தமிழ்நாடு அரசியலில் இதை பற்றி பேச பாஜக நினைக்கிறதா.. அல்லது வேறு எதுவும் பெரிய பிளான்கள் இருக்கிறதா என்று திமுக தரப்பு விவாதித்து வருகிறதாம். தேவைப்பட்டால் தமிழ்நாட்டில் மூத்த அமைச்சர்களை திமுக சார்பாக இலங்கைக்கு அனுப்பும் திட்டத்திலும் திமுக தரப்பு இருக்கிறதாம்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications