சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்கும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணிக்கும் இடையிலான அதிகார மோதல்கள், பலத்த அரசியல் குழப்பங்களைச் சந்தித்து வந்த நிலையில், இப்போது சமாதானமாகி வருவதாக தெரிகிறது. இந்த வேலுமணி டீமின் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? சிவி சண்முகம் அடுத்த சாய்ஸ் என்ன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக உட்கட்சி மோதல், தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான இன்னொரு அணி என அதிமுக 2 பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த அரசியல் பிளவு, தமிழக சட்டப்பேரவையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

AIADMK

அதிமுகவில் சமாதானம்

2 தரப்பினரும் மாறி மாறித் தங்கள் பலத்தை நிரூபிக்க முயன்ற நிலையில், சமீபத்திய அரசியல் நகர்வுகள் அதிமுகவின் போக்கையே மாற்றிவிட்டன.. .எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அத்துடன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதத்தையும் அளித்தனர்.

அதேநேரத்தில், மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கியது.

மேற்கண்ட பரபரப்பு நிகழ்வுகளுக்குப் பிறகு, எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைய, எடப்பாடி பழனிசாமி தரப்பின் பலம் 28 ஆக உயர்ந்தது. இந்தச் சூழல் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குச் சாதகமாக மாறியது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சி.வி.சண்முகம் இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்கள்..

இந்த ஆலோசனைக்குப் பிறகு, அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக திடீர் திருப்பமாக, பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சென்றனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கம்

நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, புவனகிரி அருண் மொழி தேவன், பழனி ரவிமனோகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 14 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமியையை சந்தித்து இணக்கமாக செல்ல முடிவெடுத்துள்ளதற்கு என்ன காரணம்?

14 பேருமே தங்களின் அரசியல் இருத்தலைத் தக்கவைத்துக் கொள்ளும் கட்டாயமே முதன்மைக் காரணமாக உள்ளது.. அதிமுகவின் பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமி வசமே வலுவாக இருப்பதால், அவருக்கு எதிராக தொடர்ந்து தனி அணியாக செயல்படுவது தங்களின் எம்.எல்.ஏ. பதவியையே கேள்விக்குறியாக்கும் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனராம்.

அதுமட்டுமல்ல தவெக போன்ற பிற கட்சிகள் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட நிலையில், அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, மீண்டும எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் ஒன்றிணைவதே தங்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பான வழியாக அவர்கள் கருதுவதாக தெரிகிறது.

இழந்த பதவியை பெறுவது

தாங்கள் இழந்த கட்சிப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் கட்சியில் கவுரவமான இடத்தைப் பிடிப்பதன் மூலம் மட்டுமே வரும் தேர்தல்களிலும், கட்சி அமைப்பிலும் தொடர்ந்து அரசியல் செய்ய முடியும் என்ற எதார்த்தமான முடிவின் அடிப்படையில், சமரசத்திற்கான ஒரு முயற்சியாகவே அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இரு அணிகளும் முறைப்படி இணைந்த பிறகு, சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் கோரிக்கையைத் திரும்பப் பெறவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதுமட்டுமல்ல, 2 அணிகளும் இணைந்தால் மட்டுமே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளதால், இது வெறும் தற்காலிக அமைதியா அல்லது உண்மையிலேயே கட்சி ஒன்றிணைகிறதா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்..

சிவி சண்முகம் முடிவு?

அதேசமயம், இந்த சமரச முயற்சியில் சி.வி.சண்முகம் கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.. இதற்கு என்ன காரணம்?

சி.வி.சண்முகம் கட்சித் தலைமையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும், அவரை ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்யக் கோரியது உள்ளிட்ட விவகாரங்களில் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதே இந்த விலகலுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பொதுத்தேர்தலுக்குப் பிறகு கட்சியின் தோல்விக்கான காரணங்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும், தலைமை ஒருங்கிணைப்பில் அதிருப்தி இருப்பதாகவும் சி.வி.சண்முகம் பகிரங்கமாகவே அதிருப்தியை வெளிப்படுத்தி வந்துள்ளதையும் இங்கு நினைவுகூரவேண்டி உள்ளது.

எம்எல்ஏ பதவி

எனினும், தனி அணி அமைத்துச் செயல்பட்டதால் செல்வாக்கை இழந்துள்ள சி.வி. சண்முகத்திற்கு, மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஆவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

ஆளுங்கட்சியான தவெகவில் எந்தவிதமான அதிகாரமும் கிடைக்காத சூழலில், எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவின் முக்கிய அதிகார மையத்துடன் இணைய வேண்டிய கட்டாயத்தில் சிவி சண்முகம் உள்ளதால், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவைப் பெறுவதே இப்போதைக்கு அவருக்குள்ள ஒரே அரசியல் வாய்ப்பாகும் என்றும் தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள்.

ஆனால், சமரசத்துக்கும் வராத நிலையில், சிவி சண்முகம் அடுத்து என்ன முடிவெடுக்க போகிறார்? என்ற ஆர்வம் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+