பாஜக பதறுது.. உடனே வாங்க.. டெல்லிக்கு விரைந்த கட்சியின் 2 இரண்டாம் கட்ட தலைகள்.. காரணம் உளவுத்துறை
சென்னை: தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த 2 முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்கள் டெல்லிக்கு அவசரமாக விரைந்து உள்ளார்களாம். தமிழ்நாடு பாஜகவில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவிக்கொண்டு இருக்கிறது. கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகளுக்கே என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு கடும் பதற்றம் நிலவிக்கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக நேற்றில் இருந்து உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. நாமும் இது தொடர்பாக பாஜகவில் சிலரிடம் பேசினோம். பாஜக தலைவர் விவகாரம் தொடர்பாக சில முக்கியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.

தமிழ்நாடு பாஜகவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக லைம் லைட்டில் தமிழ்நாட்டில் இருந்த பாஜக சட்டென சைலண்ட் ஆகி உள்ளதும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இப்போதைக்கு தலைவர் மாற்றம் உறுதியாகிவில்லை என்றே நம்மிடம் பேசி பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனை நடந்து உள்ளது. ஆனால் நியமிக்கப்பட போவது தற்காலிக தலைவரா .. நிரந்தர தலைவரா என்பது தெரியாது.
தமிழக பாஜக தலைவர் மாற்றம்; ஒரு மூத்த பெண் நிர்வாகியின் பெயர் தலைவர் பதவிக்கு அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அவர் மீது டெல்லி பாஜகவிற்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. ஆனாலும் அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் டெல்லி உள்ளது. அண்ணாமலைதான் கட்சியை வளர்த்தார்.. இரண்டு இலக்கத்தில் வாக்கு வங்கியை கொண்டு சென்றது அவர்தான் என்ற பெருமை டெல்லிக்கு உள்ளது. அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது. மற்றபடி டெல்லி அவரை நம்பாமல் எல்லாம் இல்லை. அவர் பதவியில் தொடர வேண்டும் என்பதே விருப்பம்.. ஆனால் அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது.
எனவே விரைவில் தலைவர் மாற்றங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ஆனால் இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பயணம்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த 2 முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்கள் டெல்லிக்கு அவசரமாக விரைந்து உள்ளார்களாம். அதன்படி இரண்டு இரண்டாம் கட்ட தலைவர்களை டெல்லிக்கு வாங்க என்று அழைத்து உள்ளார்களாம்.
அமித் ஷாவிற்கு போன உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். அந்த ரிப்போர்ட் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம். அதில் சிலருக்கு எதிராக கடுமையான முடிவுகள் இருந்துள்ளதாம். அதை பார்த்த நிலையில் .. இரண்டு பேரை டெல்லிக்கு வர சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம்,
இதன் காரணமாகவே தமிழ்நாடு பாஜகவில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவிக்கொண்டு இருக்கிறது. கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகளுக்கே என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு கடும் பதற்றம் நிலவிக்கொண்டு இருக்கிறது. சிலர் தலைவர் மாற்றம் என்கின்றனர்.. சிலர் அதெல்லாம் இல்லை என்கின்றனர். அதுவும் அண்ணாமலை வெளிநாடு பயணம் வேறு இடையில் உள்ளது.. இதனால் என்ன நடக்கும் என்பது வரும் நாட்களில் தெரியும் என்கிறார்கள் பாஜகவினர்!
-
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications