Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய குற்றம் இது.. மாணவிகள் முன் தாமு பேசுவது என்ன? சீனுக்குள் வந்த பிரபலம்.. மேட்டர் சீரியசாகுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தாமு மாணவர்கள் மத்தியில் பேசி வருவது குறித்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் கருத்து தெரிவித்துள்ளார் .

பள்ளிகளில் நடிகர் தாமு பேசுவதற்கு எதிராக கடுமையாக கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் தாமுவின் பேச்சு பிற்போக்குத்தனமாக இருப்பதாக கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Why are Dhamu speeches in Schools getting very negative feedback and What will Government do?

தாமு மீது முக்கியமான சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அவர் பள்ளிகளில் மாணவ, மாணவியரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் விதமாக பேசுகிறார். கடுமையான மன ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். பொதுவாக சுயமுன்னேற்ற பேச்சாளராக பேசும் நபர்கள்.. நம்மிடம் உள்ள குறைகளை களைந்து பாசிட்டிவாக உணர வைக்க வேண்டும்.

தவறு செய்கிறாரா: பேசி முடித்துவிட்டு சென்றால் ஒரு புத்துணர்ச்சி இருக்க வேண்டும். வாழ்க்கை குறித்த நம்பிக்கை இருக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும். ஏற்கனவே படிப்பில் அதிக டென்ஷனாக உள்ளவர்கள் இன்னும் நன்றாக, அமைதியாக இருக்க வேண்டும். மன அமைதி, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

ஆனால் சுயமுன்னேற்ற பேச்சாளராக வரும் தாமு மாணவ, மாணவியரை அழ வைக்கிறார். கடுமையான சொற்கள் மூலம் அவர்களை கலங்க வைத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறார் என்ற புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சமீபத்தில் அவர் பேசினார். இதுவும் கூட கடுமையாக சர்ச்சையானது.

விமர்சனம்: இந்த நிலையில்தான் நடிகர் தாமு மாணவர்கள் மத்தியில் பேசி வருவது குறித்து குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் தாமு அவர்களே குழந்தைகளை கொடுமைப்படுத்தாதீர்... ஊடகங்களே... இப்படியான வீடியோக்களை வெளியிடாதீர்கள். இவை குழந்தைகளின் உரிமைகளுக்கும், மாண்புக்கும் எதிரானது மற்றும் குழந்தைகளின் சிறந்த நலனுக்கும் எதிரானது. குழந்தைகளை அழவைப்பது என்பது குழந்தைகளை துன்புறுத்தும் செயலாகும். இது சட்டப்படி குற்றமாகும். குழந்தைகளை அறிவுத்தளத்தில் அணுகுங்கள் உணர்ச்சித் தளத்தில் அணுகாதீர், என்று கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

தொடர் பேச்சு: நடிகர் தாமு பல்வேறு தமிழ் படங்களில் காமெடியனாக நடித்தவர். பல பெரிய ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் பேச்சாளராக பள்ளிகளில் பேசி வருகிறார். சுயமுன்னேற்ற பேச்சாளராக இவர் மாணவ, மாணவியர் முன் பேசி வருகிறார். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சமீபத்தில் அவர் பேசினார்.

காவல்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் முன் அவர் பேசினார். 'மாண்புமிகு மாணவிகள்' திட்டம் சார்பாக போலீசார் அழைப்பின் பெயரில் இவர் மாணவிகள் முன்னிலையில் பேசினார்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் நடந்த போது சுமார் 1 மணி நேரம் தாமு பேசினார். அவர் பேசுவதை கேட்க கேட்க மாணவிகள் கண்ணீர் வடித்தனர். பெற்றோர் பற்றியும், படிப்பு பற்றியும் பாசிட்டிவாக பேசாமல்.. குற்ற உணர்ச்சியை தூண்டும் வகையில் அவர் பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

தடை வேண்டும்: மாணவிகளுக்கான சுய ஒழுக்கம் பற்றி நீண்ட நேரம் அவர் பேசினார். அதேபோல் தற்பாதுகாப்பு, தன்நிலை உணர்தல் குறித்தும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். அவர் பேசிய சில கருத்துக்கள் சிறப்பாக இருந்தாலும் சில கருத்துக்கள் மாணவிகளை குற்ற உணர்ச்சியில் தள்ளும் அளவிற்கு கொடுமையானதாக இருந்தது. இந்த நிலையில்தான் நடிகர் தாமு பள்ளிகளில் நிகழ்த்தும் சுயமுன்னேற்ற பேச்சுகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+