டிரம்பிற்கு ஆசை ஆசையாக ஆதரவு தந்தார்களே.. பதவி ஏற்கும் முன்பே இந்தியர்களுக்கு.. மிகப்பெரிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு இந்தியர்கள் வெகுவாக ஆதரவு அளித்தனர். இந்தியர்கள் அதிகம் உள்ள கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் இந்தியர்கள் வெகுவாக டிரம்பிற்குத்தான் அதிகம் ஆதரவு தந்தனர். ஆனால் அதே இந்தியர்களுக்கு டிரம்ப் மூலம் பெரிய அளவில் எதிர்ப்பு வந்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் நேரடியாக எங்கும் இந்தியர்களை எதிர்க்கவில்லை. அமெரிக்காவில் மற்ற நாட்டினர் குடியேறுவதை அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். ஆனாலும்.. சட்டபூர்வமாக மக்கள் குடியேறுவதை அவர் ஆதரித்தே வந்துள்ளார். அந்த வகையில் எலான் மஸ்க் கூட அமெரிக்காவில் குடியேறியவர்தான். டிரம்ப் ஆதரிக்கும் விவேக் ராமசாமியும் அதேபோல்தான். அவர் இந்தியர். ஆனால் இவர்களை டிரம்ப் ஆதரிக்கிறார்.

india america

அதோடு எச் 1 பி விசாவை டிரம்ப் ஆதரிக்கிறார். இந்த நிலையில்தான் டிரம்ப் வந்தால் எச் 1 பி விசா உள்ளவர்களுக்கு மட்டுமே எளிமையான அனுமதியை தருவார்.. மற்ற விசா விண்ணப்பம் செய்பவர்களுக்கு கடுமையான விதிகளை கொண்டு வருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எச் 1 பி விசா திறமையானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் அதை பெறுவது கடினம். இதனால் எச் 1 பி விசா பெற முயலும் இந்தியர்களுக்கு சிக்கல் இல்லை.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் AIக்கான மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார். இப்படி இந்தியர்களை தொடர்ந்து டிரம்ப் ஆதரித்து வந்துள்ளார்.

டிரம்ப் ஆதரவாளர்கள்: ஆனால் டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் இந்தியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

1. டிரம்ப் ஆதரவாளர்கள் தீவிர வலதுசாரிகள். அவர்களுக்கு அமெரிக்கர்கள் - வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே முதல்.

2. இத்தனை காலம் டிரம்ப் ஆதரவாளர்களின் எதிர்ப்பாக கறுப்பின அமெரிக்கர்கள் இருந்தனர். இப்போது அதே வெள்ளை அமெரிக்கர்கள் இந்தியர்களை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.

3. இந்தியர்களுக்கு எதிராக வெள்ளையின அமெரிக்கர்கள் திரும்ப தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் தங்கள் வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள் , முக்கிய பொறுப்புகளுக்கு இந்தியர்கள் வருகிறார்கள் என்று வெள்ளையின அமெரிக்கர்கள் வாதம் வைக்கின்றனர்.

4. 2023 நிதியாண்டில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 72.3% இந்தியர்கள் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அங்கே இந்தியர்கள் இதனால் மேலும் குடியேறுவார்கள் என்ற அச்சம் உள்ளது. இதை வெள்ளியின் அமெரிக்கர்கள் எதிர்க்கின்றனர். இந்தியர்கள் அமெரிக்கா வந்து அமெரிக்காவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள். சொந்த நாட்டில் ஜாதி, மத பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை பிரச்சனையில் தள்ளிவிட்டு சொகுசாக அமெரிக்காவில் சிலர் குடியேறிவிடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிற்கும் அவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை என்று வெள்ளையின அமெரிக்கர்கள் இந்தியர்கள் மீது வெறுப்பை உமிழ தொடங்கி உள்ளனர்.

5. இவர்கள் பெரும்பாலும் டிரம்ப் ஆதரவாளர்கள். இந்த டிரம்ப் ஆதரவாளர்கள் இந்தியர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளனர். டிரம்ப்பை ஆதரித்த அதே இந்தியர்களை டிரம்ப்பை ஆதரிக்கும் வெள்ளை அமெரிக்கர்கள் எதிர்க்க தொடங்கி உள்ளனர். வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது போல இந்தியர்கள் அமெரிக்காவில் தாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+