துபாய், அமெரிக்காவை விட.. இந்தியாவில் ஐபோன் விலை 22% வரை அதிகம் ஏன்? காரணம் இதுதான்!
சென்னை: புதியதாக ஐபோன் மாடல்கள் நேற்று வெளியாகியிருந்தன. ஆனால் துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
நேற்று மொத்தம் 3 வகையான புதிய மாடல்களில் ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் Duo. இவற்றின் விலைகளை இந்தியா, அமெரிக்கா, துபாய் என ஒப்பிட்டு பார்க்கலாம்

இந்தியாவில் விலை
iPhone 18 Pro - 1,34,900
iPhone 18 Pro Max - 1,44,900
iPhone Duo - 2,99,000
அமெரிக்காவில் விலை
iPhone 18 Pro - 1,00,900
iPhone 18 Pro Max - 1,09,100
iPhone Duo - 1,67,900
துபாயில் விலை
iPhone 18 Pro - 1,16,500
iPhone 18 Pro Max - 1,25,650
iPhone Duo - 1,94,200
துபாய் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் விலை 20-22% கூடுதலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இறக்குமதி வரி மற்றும் சுங்க கட்டணம்தான். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் சில அடிப்படை ஐபோன் மாடல்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்தாலும், அதன் முதன்மை மாடல்களான Pro மற்றும் Pro Max சீரிஸ் போன்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு சுமார் 22% வரை அடிப்படை சுங்க வரியை விதிக்கிறது. இது போக செஸ் வரிகளும் இதனுடன் இணைகின்றன. இந்தியாவை பொறுத்தவரை அனைத்து மொபைல் போன்களுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
அமெரிக்கா அல்லது துபாயுடன் ஒப்பிடும்போது இந்த வரி மிக அதிகம். உதாரணமாக துபாயில் வெறும் 5% மட்டுமே வாட் வரி விதிக்கப்படுகிறது. அங்கு இறக்குமதி வரிகள் கிடையாது. அமெரிக்காவில் காட்டப்படும் விளம்பர விலையில் ஆரம்பத்தில் மாநில வரிகள் சேர்க்கப்படுவதில்லை.
இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சாதாரண ஐபோன் மாடல்களுக்கு கூட, அதற்கு தேவையான மிக முக்கியமான உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்துதான் கொண்டு வரப்படுகின்றன. இந்த உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கும் ஆப்பிள் நிறுவனம் வரி செலுத்த வேண்டியுள்ளதால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போன்களின் விலையும் எதிர்பார்த்த அளவு குறைவதில்லை.
இதுபோக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச விலைகளை அமெரிக்க டாலரின் மதிப்பை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும்?போது ஆப்பிள் நிறுவனம் தனது லாப வரம்பை தக்க வைக்க இந்தியாவில் 20-22% வரை விலையை உயர்த்தியுள்ளது. இதுதான் இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிகமாக இருக்க காரணமாகும்.


Click it and Unblock the Notifications
