Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயிலில் முளைச்ச நெல்.. கும்பகோணத்தில் 36,000 மூட்டைகள் என்னாச்சு? திமுக மீது பாய்ந்த பாமக அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசின் அலட்சியத்தால் கும்பகோணத்தில் 36,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டன. நிர்வாகத் திறனற்ற திமுக அரசு நெல் மூட்டைகளை வீணடிப்பதாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிமாவட்ட அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய நெல் மூட்டைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

தமிழக விவசாயிகளின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Kumbakonam Rice Bags

விவசாயிகள் நலன்

இன்றைய சூழலில் விவசாயிகளைக் காப்பாற்ற ஒரே வழி மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, 25% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி பெறுவது தான்.

இப்போது மத்திய அரசிடம் விண்ணப்பித்து 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியும். ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்பும் தமிழக அரசால் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.

எனவே தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

பாமக அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று காட்டமாக கூறியிருக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்..

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வெளிமாவட்டங்களில் உள்ள அரிசி அரவை ஆலைகளுக்கு ரயில்களில் ஏற்றி அனுப்புவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட 36,000 நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படாததால், கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கும் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

லாரிகளில் முளைத்த நெல் மூட்டைகள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்று வட்டார பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கடந்த 16-ஆம் நாள் சரக்குந்துகள் மூலம் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அவை அதே நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ ரயில்கள் மூலம் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 11 நாள்களாகியும் இன்று வரை அவை அனுப்பப்படாமல் லாரிகளுடன் ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மழையில் முளைத்த நெல்

இடையில் மழை பெய்ததால், நன்றாக நனைந்த நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கி விட்டன. இப்போதும் கூட அந்த நெல் மூட்டைகளை அனுப்பி வைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் சில நாள்கள் இதே நிலை நீடித்தால் அந்த நெல் பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்ப முடிவு செய்த அரசு, அதற்குத் தேவையான ரயில் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்குகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்; அல்லது லாரிகள் மூலமாகவே அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

நெல் மூட்டைகள்

ஆனால், எதையும் செய்யாததால் நெல் மூட்டைகளையும் வீணடித்து, 11 நாள்களுக்கும் மேலாக லாரிகளுக்கு வாடகை வழங்க வேண்டிய நிலையையும் திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் திமுக அரசின் நிர்வாகத் திறனா?

கும்பகோணம் ரயில் நிலையத்தில் முளைத்த நிலையில், லாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் பயன்பாட்டுக்கு உகந்தவையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவற்றை பயன்படுத்த முடியும் என்றால் உடனடியாக அரிசி ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+