ரயில்களில் நீல நிறத்தில் மட்டுமே இருக்கைகள் ஏன்? பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சீக்ரெட் இதுதான்!
சென்னை: ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் ஒரு விஷயத்தை நோட் பண்ணியிருக்க கூடும். எக்ஸ்பிரஸ், தொலைதூர ரயில்களில் உள்ள இருக்கைகள் மற்றும் ஸ்லீப்பர் படுக்கைகள் ஒரே மாதிரியான நிறத்தில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதாவது நீல நிறத்தில் மட்டுமே இருக்கும். வித விதமான கலர்களில் டிரெயினுக்கு ஒரு கலர் என கொடுக்காமல், ஏன் நீல நிறத்த்தில் மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள் என எப்போதாவது பயணிகள் நினைத்து இருக்கக் கூடும்..
ரயில்களில் இப்படி நீல நிறத்தில் மட்டும் படுக்கைகள் இருப்பதற்கு பின்னால் காரணம் இல்லாமல் இல்லையாம். புளு நிறத்திற்கு பின்னால் மறைந்து இருக்கும் ரகசியம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

நீல நிறத்தில் மட்டும் ஏன்?
ரயில்களில் முன்பதிவு பெட்டியாக இருந்தாலும் சரி.. முன்பதிவு இல்லாத அன்ரிசர்வ்ட் பெட்டியாக இருந்தாலும் சரி.. இருக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக நீல நிறத்தில் மட்டுமே இருக்கும். பொதுவாக பேருந்துகளில் விதவிதமான கலர்களிலும், ஸ்பாஞ்ச் போன்ற டிசைன்களிலும் இருக்கைகளை பார்த்து இருப்போம். ஆனால் ரயில்களில் மட்டும் ஒரே மாதிரியான கலரில் எந்த டிசைன்களும் இன்றி படுக்கைகளின் கலர் இருக்கும்.
இந்த கலரை ரயில்வே தேர்வு செய்தற்கு பின்னால் சில சுவாரசிய காரணங்கள் உள்ளன. பொதுவாக நீல நிறம் என்பது அமைதி, நம்பகத்தன்மை உள்ளிட்ட உணர்வுகளுடன் தொடர்பு உடையது. வானம், கடல் என நீலம் என்பது மக்களுக்கு இயற்கையோடு இயற்கையாக எப்போதும் கண்ணில் தென்படக்கூடிய ஒன்றாகும். ரயில் பயணங்கள் பொதுவாக நீண்ட நேரம் நீடிக்க கூடியது. பல மணி நேரம் ரயில்களில் மக்கள் பயணிக்க வேண்டியிருக்கும்.
இன்னொரு காரணமும் இருக்கு
வெளி மாநிலங்களுக்கு எல்லாம் செல்வதாக இருந்தால் நாள் முழுக்க ரயிலில் பயணிக்க வேண்டியிருக்கும். இப்படியான நேரத்தில் பயணிகளுக்கு எந்த சோர்வும் இருக்காமல் இருக்க.. ஒரு அமைதியான உணர்வை தரும் நிறமாக இது உளவியல் பூர்வமாக அமைந்துள்ளது. அதுமட்டும் இன்றி ரயில்களில் பயணிகள் பயணம் செய்யும் போதும் நொறுக்குத் தீனிகளையும், டீ, காஃபி உள்ளிட்ட பானங்களையும் அருந்துவார்கள்.
அதேபோல தொலை தூர பயணங்களின் போது ரயிலின் இருக்கையில் இருந்தபடியே உணவு உட்கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இத்தகைய நேரத்தில் இருக்கையை தூய்மையாக பராமரிக்கவும் அழுக்கு பட்டாலும் எளிதில் தென்படாதவாறும் இருக்கிறது என்பதால் ரயில்களில் இந்த நீல நிற வண்ணம் பயன்படுத்தப்படுகிறது.
வந்தே பாரத் ரயில்களில் மாற்றம்
அதேநேரத்தில் சமீப காலமாக ரயில்களின் இருக்கைகள் வண்ணங்கள் மாற்றப்படுவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கக் கூடிய பெட்டிகளில் ப்ளூ நிறத்திலும், எல்.ஹெச்பி கோச்களில் தற்போது விதவிதமான நிறங்களிலும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக வந்தே பாரத் ரயிலில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கைகள் உள்ளன. என்னதான் கலர்களை மாற்றினாலும் ரயில் இருக்கை என்றாலே, அந்த ப்ளூ நிற இருக்கைகளும், படுக்கைகளுமே ரயில் பயணிகளுக்கு ஃபேவரைட் ஆக உள்ளது.




Click it and Unblock the Notifications
