எதோ நடக்க போகுது.. அடுத்து இவர் தானாமே.. அலர்ட் ஆன அமைச்சர்கள்.. ஸ்டாலின் வார்னிங்கால் திக்திக்!
சென்னை: வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் காரணமாக தமிழ்நாடு அமைச்சர்கள் பலரும் உச்சகட்ட கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்களாம்.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்தன. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் 1 மணி நேரத்தில் 200 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தினர்.
ரெய்டு ஏன்? : போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வடமாநிலங்கள்: பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.
கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அலர்ட் அமைச்சர்கள்: வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் காரணமாக தமிழ்நாடு அமைச்சர்கள் பலரும் உச்சகட்ட கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்களாம். செந்தில் பாலாஜி ரெய்டு காரணமாக அமைச்சர்கள் பலரும் கவனத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்து நமக்கும் ரெய்டு வரலாம் என்ற கவனத்துடன் இவர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டு குறித்து முன்பே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை அழைத்து.. லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள்.
கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி உள்ளார். முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்டவர்களை அழைத்து பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கவனம்: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. இதனால் அடுத்து நம்ம வீட்டிலும் ரெய்டு நடக்கலாம் என்று அமைச்கர்கள் பலரும் அலர்ட் ஆகி இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications