குட் விஜயின்.. பேட் ரசிகர்களால்.. அக்லி நிலைக்கு போன தமிழக வெற்றிக் கழகம்! இதுக்கு எதுக்குங்க கட்சி?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட போது தமிழக அரசியலில் பெரிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கட்சியோ அடுத்தடுத்து பல்வேறு தவறுகளை செய்துகொண்டு இருக்கிறது. அதில் புதிய இணைப்பு ரசிகர்கள் செய்யும் முக்கிய தவறு ஒன்று!
தமிழக வெற்றிக் கழகம் ஒரு பக்கம் விசிக உடன் கூட்டணி வைக்க முயன்று தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா வழியாக விசிக உடன் கூட்டணி வைக்க முயன்று தோல்வி அடைந்தது. அதன்பின் அதிமுக உடன் கூட்டணி வைக்க முயன்று தோற்றது. இதன் மூலம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மொத்தமாக தனித்துவிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அதிமுக கூட்டணி வந்த போதே அதை ஏற்காமல் மிஸ் செய்துள்ளார். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள்
என்னதான் விஜய் மேற்கண்டவாறு கூட்டணி விவகாரங்களில் சொதப்பினாலும் அவருக்கு அரசியலில் கொஞ்சம் குட் மார்க் கொடுக்கலாம். ஏனென்றால் அரசியலுக்கு புதிது. புதிதாக இப்படி எல்லாம் தவறுகள் சகஜம்தான். அவர் குட்டாக இருந்தாலும் அவரின் ரசிகர்கள் செய்யும் பேட் விஷயங்களால் அந்த கட்சி தற்போது அக்லியான நிலைக்கு.. அதாங்க அருவருப்பான நிலைக்கு செல்ல தொடங்கி உள்ளது. நடிகர் விஜய் .. அரசியல்வாதி ஆக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். அவர் தவெக கட்சியை தொடங்கிய நிலையிலும் கூட.. அவரின் ரசிகர்கள் இன்னும் ரசிக மனோபாவத்தில் இருந்து வெளியே வராமல்.. சினிமா சண்டை போட்டுகொண்டு உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. இல்லை இல்லை ரசிகர்கள் அஜித்திற்கு எதிராக ரசிக ஹேஷ்டாக் சண்டை போட்டுக்கொண்டு உள்ளனர். அஜித்தின் குட் பேட் அக்லி படம் சமீபத்தில் வெளியானது. இது மாஸ்டர் படம் போன்ற விஜயின் டீசர் ரெக்கார்ட்களை முறியடித்து உள்ளது. அதேபோல் வசூல் ரெக்கார்டுகளிலும் அசதி உள்ளது. ஒரே நாளில் பல மில்லியன்ஸ் வியூஸ்களை பெற்றுள்ளது. தினமும் வசூலிலும் கலக்கி உள்ளது, இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. அதாவது விஜய் ரசிகர்கள்.. அதை கிண்டல் செய்கின்றனர்.
மோசமான சினிமா சண்டை
முக்கியமாக தொடர் விமர்சனம்.. கடுமையான பர்சனல் அட்டாக் கூட செய்கின்றனர். யார் செய்வது என்று ப்ரோபைலை பார்த்தால் அங்கே தவெக கொடி. மாஸ்டர் இப்போ வந்தால் அதைவிட பெரிய ஹிட் அடிக்கும். விஜயின் கடைசி படத்திற்கு பாருங்கள்.. எவ்வளவு வியூஸ் வருகிறது என்று.. அப்போ புரியும் என்று கூறி வருகின்றனர். அஜித்தே சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. பட்டங்களை துறந்தவர்.. கடவுளே அஜித்தே போன்ற வசனங்களையும் விரும்புவது இல்லை.
அப்படி இருக்க அவர் விஜயை போட்டியாகவும் பார்ப்பது இல்லை. ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றும் கூட.. அஜித்தை போட்டியாக கருதி விஜய் ரசிகர்கள் போஸ்ட் செய்கின்றனர். தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது விஜய் தனது ரசிகர்களை, தொண்டர்களை அதை பற்றி பேச வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும்.
ஆனால் விஜயும் அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. பாசிசமும், பாயாசமும்
செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் விஜய்.. தனது ரசிகர்களின் விளையாட்டுகளை கேள்வி கேட்காமல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஒரு அஜித் படம் வந்தால் போது விஜய் கட்சி காலி.. ரசிகர்களே கட்சியின் தோல்வியை உறுதி செய்துவிடுவார்கள் என்று கிண்டலடிக்கும் நிலையில்தான் அவரின் ரசிகர்களின் செயல் உள்ளது.
அஜித் படத்தை எதிர்க்கும் அதே வீரியத்தை விஜய் ரசிகர்கள் இதுவரை சமூக பிரச்சனை எதற்கும் பெரிதாக காட்டவில்லை. சாலையில் இருக்கும் குழியை அடைத்து ரீல்ஸ் போடுவதே அரசியல்.. அஜித் படத்தை எதிர்த்து களத்தில் சண்டை செய்வதே அரசியல் என்று நினைக்கிறார்கள் விஜய் பேன்ஸ். ஒரு விழாவில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம்.. ப்ரோ நீங்கதான் சினிமா வந்துடீங்களா இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பார் விஜய். அதை விஜய் அவரின் ரசிகர்களிடம் ப்ரோ.. நாமதான் அரசியலுக்கு வந்துட்டோமே இங்கே என்ன பண்ணுறீங்க என்று சினிமா சண்டை போடும் ரசிகர்களிடம் கேட்க வேண்டும்.












Click it and Unblock the Notifications