அசிங்கம்.. ஆபாசம்.. எல்லை மீறும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. விஜய் கண்டிப்பாரா? சொந்த செலவில் சூனியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது விஜய் ரசிகர்கள் அவருடன் சேர்ந்து வளர்ந்திருக்க வேண்டும்.. அரசியல் பேச தொடங்கி இருக்க வேண்டும்.. ஆனால் நான் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று விஜய் ரசிகர்கள் இன்னமும் ரசிக சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர். விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று விஜய் அன்போடு அழைக்கும் தவெக ஐடி விங் அப்படி என்ன செய்கிறது.. அப்படி என்ன நடந்தது? என்று பார்க்கலாம்.

1. நேற்று நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெற்றார். ஆனால் இந்த நேரத்தில் சரியாக நடிகை ஹீராவின் 3 வார பழைய போஸ்ட் என்று சொல்லப்படும் போஸ்ட் ஒன்றை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

2. அஜித்தை மோசமாக விமர்சனம் செய்யும் வகையில் பல பொய்யான தகவல்களுடன் இருந்த அந்த போஸ்டை டிரெண்ட் செய்தனர்.

3. சரியாக அஜித் குடும்பத்துடன் ஐபிஎல் பார்க்க சென்ற பின்.. பத்ம பூஷன் வாங்கும் நாளில் இதை டிரெண்ட் செய்தனர்.

Why are Vijay Tamilaga Vetri Kazhaga Virtual Warriors still doing fan fights

4. அதோடு ஷாலினியை கடுமையாக கேவலமாக பேசுவது , அஜித் குடும்பத்தை பற்றி தவறாக எல்லை மீறி பேசுவது என்று ஸ்கிரீன்ஷாட் கூட எடுக்க முடியாத அளவிற்கு இந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் போஸ்ட் செய்திருந்தனர்.

5. விர்ச்சுவல் வாரியர்ஸ் இப்போது சாதாரண ரசிகர்கள் இல்லை. ஐடி விங். ஆனால் ஒரு கட்சியின் ஐடி விங் ஒரு அரசியல் பக்கமே நிற்காத நடிகரை கடுமையாக விமர்சனம் செய்து.,. அதையும் குடும்பத்தை விமர்சனம் செய்து பார்த்துள்ளீர்களா. நேற்று அஜித்தை அப்படித்தான் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் விமர்சனம் செய்தனர்.

6. விஜய் - அஜித் இடையே சினிமா போட்டி இருந்தது. அதெல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. இப்போதும் அஜித் உடன் சினிமா சண்டை போடுவேன் என்றால்.. விஜய் ரசிகர்கள் ஏன் கட்சிக்காக விர்ச்சுவல் வாரியர்ஸ் ஆக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

7. அஜித் ரசிகர்கள் என்று இல்லை.. இதை நேற்று தட்டி கேட்ட கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என்று பலரையும் போட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர் விர்ச்சுவல் வாரியர்ஸ்.

8. பூத் கமிட்டி என்றால் என்னவென்று தெரியவில்லை, லோக்சபா ராஜ்ய சபா வேறுபாடு தெரியவில்லை.. வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என்னவென்று கூட தெரியவில்லை. இதை எல்லாம் கற்காமல் இன்னமும் ரசிக சண்டைகளை விர்ச்சுவல் வாரியர்ஸ் போட்டுகொண்டு இருக்கின்றனர்.

9. என்னதான் விஜய் மேற்கண்டவாறு கூட்டணி விவகாரங்களில் சொதப்பினாலும் அவருக்கு அரசியலில் கொஞ்சம் குட் மார்க் கொடுக்கலாம். ஏனென்றால் அரசியலுக்கு புதிது. புதிதாக இப்படி எல்லாம் தவறுகள் சகஜம்தான். அவர் குட்டாக இருந்தாலும் அவரின் ரசிகர்கள் செய்யும் பேட் விஷயங்களால் அந்த கட்சி தற்போது அக்லியான நிலைக்கு.. அதாங்க அருவருப்பான நிலைக்கு செல்ல தொடங்கி உள்ளது. நடிகர் விஜய் .. அரசியல்வாதி ஆக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். அவர் தவெக கட்சியை தொடங்கிய நிலையிலும் கூட.. அவரின் ரசிகர்கள் இன்னும் ரசிக மனோபாவத்தில் இருந்து வெளியே வராமல்.. சினிமா சண்டை போட்டுகொண்டு உள்ளனர்.

10. தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. இல்லை இல்லை ரசிகர்கள் அஜித்திற்கு எதிராக ரசிக ஹேஷ்டாக் சண்டை போட்டுக்கொண்டு உள்ளனர். அஜித்தின் குட் பேட் அக்லி படம் சமீபத்தில் வெளியானது. இது மாஸ்டர் படம் போன்ற விஜயின் டீசர் ரெக்கார்ட்களை முறியடித்து உள்ளது. அதேபோல் வசூல் ரெக்கார்டுகளிலும் அசதி உள்ளது. ஒரே நாளில் பல மில்லியன்ஸ் வியூஸ்களை பெற்றுள்ளது. தினமும் வசூலிலும் கலக்கி உள்ளது, இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. அதாவது விஜய் ரசிகர்கள்.. அந்த கிண்டல் செய்கின்றனர்.

Take a Poll

11. முக்கியமாக தொடர் விமர்சனம்.. கடுமையான பர்சனல் அட்டாக் கூட செய்கின்றனர். யார் செய்வது என்று ப்ரோபைலை பார்த்தால் அங்கே தவெக கொடி. மாஸ்டர் இப்போ வந்தால் அதைவிட பெரிய ஹிட் அடிக்கும். விஜயின் கடைசி படத்திற்கு பாருங்கள்.. எவ்வளவு வியூஸ் வருகிறது என்று.. அப்போ புரியும் என்று கூறி வருகின்றனர். அஜித்தே சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. பட்டங்களை துறந்தவர்.. கடவுளே அஜித்தே போன்ற வசனங்களையும் விரும்புவது இல்லை.

12. அப்படி இருக்க அவர் விஜயை போட்டியாகவும் பார்ப்பது இல்லை. ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றும் கூட.. அஜித்தை போட்டியாக கருதி விஜய் ரசிகர்கள் போஸ்ட் செய்கின்றனர். தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது விஜய் தனது ரசிகர்களை, தொண்டர்களை அதை பற்றி பேச வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும்.

14. ஆனால் விஜயும் அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. பாசிசமும், பாயாசமும்
செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் விஜய்.. தனது ரசிகர்களின் விளையாட்டுகளை கேள்வி கேட்காமல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஒரு அஜித் படம் வந்தால் போது விஜய் கட்சி காலி.. ரசிகர்களே கட்சியின் தோல்வியை உறுதி செய்துவிடுவார்கள் என்று கிண்டலடிக்கும் நிலையில்தான் அவரின் ரசிகர்களின் செயல் உள்ளது.

அஜித் படத்தை எதிர்க்கும் அதே வீரியத்தை விஜய் ரசிகர்கள் இதுவரை சமூக பிரச்சனை எதற்கும் பெரிதாக காட்டவில்லை. சாலையில் இருக்கும் குழியை அடைத்து ரீல்ஸ் போடுவதே அரசியல்.. அஜித் படத்தை எதிர்த்து களத்தில் சண்டை செய்வதே அரசியல் என்று நினைக்கிறார்கள் விஜய் பேன்ஸ். ஒரு விழாவில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம்.. ப்ரோ நீங்கதான் சினிமா வந்துடீங்களா இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பார் விஜய். அதை விஜய் அவரின் ரசிகர்களிடம் ப்ரோ.. நாமதான் அரசியலுக்கு வந்துட்டோமே இங்கே என்ன பண்ணுறீங்க என்று சினிமா சண்டை போடும் ரசிகர்களிடம் கேட்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது விஜய் ரசிகர்கள் அவருடன் சேர்ந்து வளர்ந்திருக்க வேண்டும்.. அரசியல் பேச தொடங்கி இருக்க வேண்டும்.. ஆனால் இன்னமும் அந்த முதுமைதான் அவர்களுக்கு வரவில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+