அரியலூர் மாணவி வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு மனு போடப்பட்ட நிலையில்.. சிபிஐ விசாரணை ஏன் தெரியுமா?
சென்னை: அரியலூர் மாணவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோரி மாணவியின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்த நிலையில் வழக்கு சிபிஐ தரப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அரியலூரை சேர்ந்த அந்த மாணவி தஞ்சாவூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி நிர்வாகம் மத மாற்றம் செய்ய சொல்லி கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. அதே சமயம் பள்ளி வார்டன் வேலை கொடுத்து டார்ச்சர் செய்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக மெஜிஸ்டிரேட் வாக்குமூலத்தில் மாணவி குறிப்பிட்டுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை
இந்த நிலையில் அரியலூர் மாணவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை கோரி முதலில் மாணவியின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தனர். மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக கூறிய நீதிபதி, முதலில் மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்யும்படி கூறினார். அதோடு தஞ்சை மேஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் அளிக்கும்படி கூறினார்.

வாக்குமூலம்
அதன்படியே மாணவியின் பெற்றோரும் 2.30 மணி நேரம் தஞ்சை மேஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் அளித்தனர். அடுத்த கட்ட விசாரணையில் மாணவியின் கடைசி வீடியோவை எடுத்த நபரை தஞ்சை எஸ்பி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டது. அவர் வாக்குமூலம் அளித்த நிலையில், அவர் வீடியோ எடுத்த போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

ஒத்துழைப்பு அளிக்கவில்லை
இதில் போலீசார் தரப்பு வைத்த வாதத்தில், மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் காரணம் என்று அந்த மாணவி கொடுத்த மேஜிஸ்டிரேட் வாக்குமூலத்தை சமர்ப்பித்தனர். அதோடு மாணவியை வீடியோ எடுத்த நபர் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று போலீசார் தரப்பு வாதம் வைத்தனர். மாணவியின் பெற்றோர் வைத்த வாதத்தில், போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாணவியின் மற்ற வாக்குமூலம் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

சிபிஐ
இதை போலீஸ்தான் வேண்டும் என்று வெளியிட்டு இருக்கிறது. மாணவி மரணம் குறித்து எஸ்.பி ஊடகங்களில் ஒரு தலைப்பட்சமாக பேசி இருக்கிறார். அதனால் வழக்கை சிபிஐ தரப்பிற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது முதலில் சிபிசிஐடி தரப்பு இதை விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் மனு அளித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில் மாணவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வாதம் வைத்தனர்.
Recommended Video

சிபிஐ
பெற்றோ வாதத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கடந்த முறை குறிப்பிட்டனர். இந்த நிலையில்தான் மனுவில் சிபிசிஐடி விசாரணை கோரி முதலில் மாணவியின் பெற்றோர் மனுவில் குறிப்பிட்டு இருந்தாலும் தற்போது மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications