பீஸ்ட் படம் விமர்சனத்துக்குள்ளாவது எதனால்... பந்தய குதிரை விஜய் வீணடிக்கப்பட்டாரா?
தமிழகத்தின் உச்ச நடிகர் நடித்த ஒருபடம் முதல் நாளே ரசிகர்களாலேயே சரியில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால் திரைக்கதை, காட்சி அமைப்பில் காட்டிய அலட்சியமே காரணம்.
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தப்படம் பீஸ்ட். அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல் எல்லாம் பெரிய அளவில் சாதனைப்படைத்தது. ஆனால் படம் சோதனையைத் தந்துவிட்டது. எதைக்கொடுத்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்கிற மனநிலையில் படம் எடுக்கப்பட்டதாக விமர்சனம் வந்துள்ளது.

ரஜினிக்கு அடுத்த மாஸ் ஹீரோ விஜய்
நடிகர் விஜய் ரஜினிக்கு அடுத்தப்படியாக பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். அவர் படங்கள் பெரிய அளவில் வசூலை வாரிக்குவிப்பவை. கடைசியாக விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பெரும் வசூலை வாரி குவித்தது. விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்ததால் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

நெல்சன் திலீப்குமார்
அதன் பின்னர் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளி வந்தது. குறுகிய கால இடைவெளியில் ஒரு படம் தயாரிக்க தயாரானது படக்குழு. படத்தை இயக்க சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் பெயர் அறிவிக்கப்பட்டது. டாக்டர் படம் நகைச்சுவையாக இருந்தது என்பதால் நெல்சன் திலீப்குமார் படத்தை சிறப்பாக இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டீம்
படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்பதால் மேலும் எதிர்பார்ப்பு கூடியது. ஏற்கெனவே அனிருத் இசையில் வாத்தி கம்மிங் பாடல் பெருமளவில் ஹிட் அடித்ததால் இந்த டீம் பெரிய அளவில் சாதிக்கும் என ரசிகர்கள் கொண்டாடினர். அரபிக்குத்து பாடலை தயாரிப்பது குறித்த சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் திலீப்குமார் கூட்டணியின் அலம்பல் அவர்களை விஜய் கலாய்ப்பது பெரிதும் வைரலானது.

அரபிக்குத்து, ஜாலியோ பாடல் கலக்கல்
பின்னர் அந்தப்பாடல் வெளியானபோது இதுவரை இல்லாத அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, இதனால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியது. அடுத்து வந்த ஜாலியோ ஜிம்கானா எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதனால பீஸ்ட் வரலாறு காணாத வெற்றியடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அது ட்ரைலர் வரும் வரைதான், அதன் பின்னர்தான் ட்விஸ்டே.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிரைலர்
ஆடியோ லாஞ்ச் இல்லை என டிரைலர் வெளியானது. ட்ரைலரில் ஒரு ஷாப்பிங் மாலில் மக்களை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகளுடன் விஜய் மோதுவதும், விமானத்தில் பறந்து சண்டைப்போடுவதும் என இருந்த காட்சிகளை வைத்து அவரவருக்கு தோன்றியதை கூறினர். சிலர் கூர்க்கா படம் போல் உள்ளது என்றும், சிலர் மணி ஹீஸ்ட் வெப் சீரீஸ் போல் உள்ளது என்றும் விமர்சித்தனர்.

இது வேற மாதிரி படம்
விஜய் விமானம் ஓட்டுவதையும், ஆக்சிஜன் மாஸ்க் இல்லாமல் ஃபைட்டர் ஜெட் ஓட்டுவதையும் விமர்சித்தனர். ஆனால் இதற்கெல்லாம் அசருவார்களா ரசிகர்கள் அவர்களும் பதிலடி கொடுத்தனர். வலிமையில் அஜித் பில்டிங் விட்டு பில்டிங் தாவுவதை சுட்டிக்காட்டி விமர்சித்தனர். ( ஆனால் லீ கூப்பர் கார் பில்டிங் விட்டு பில்டிங் தாவியது விமர்சனத்துக்குள்ளானது) இது ஜேம்ஸ்பாண்ட் போன்ற படம் என நெல்சன் சொன்னார். ட்ரைலரை வைத்து முடிவு செய்யாதீர்கள் படம் வேற மாதிரி இருக்கும் என படக்குழுவினர் கூறினர். இதனால் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ரிலீசுக்கு முன் கேஜிஎஃப்-2 வை மிரட்டிய பீஸ்ட்
இடையில் கேஜிஎஃப்-2 படம் பீஸ்ட் படம் வெளியான மறுநாள் வெளியாகும் என்று அறிவிப்பால் பீஸ்ட் படத்துடன் மோதலா என யாஷிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் விஜய் சீனியர் அவர் ரசிகர்கள் என்படத்தை ரசிப்பார்கள், என் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்.

வலுவில்லாத வில்லன் மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரம்
ஏப்.13 பீஸ்ட் படம் வெளியானது. பலரும் நள்ளிரவிலிருந்து தூங்காமல் அதிகாலை 4 மணி ஷோ பார்த்தனர். பார்த்துவிட்டு வந்தவர்களில் தீவிர ரசிகர்கள் 'வேற லெவல்' 'மாஸ்' என்றபடி சென்றனர். பல ரசிகர்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை என புழுங்கியப்படி சென்றனர். படத்தில் எதிர்பார்த்த விஜய் என்கிற நடிகருக்கான அம்சம் இல்லை ஆனால் அவரை மிகைப்படுத்தி காட்டப்பட்டதும், திரைக்கதை வலுவாக இல்லாமல் இருந்ததும் காரணம் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.

வலுவில்லாத திரைக்கதை வாய்ப்பை தவறவிட்ட நெல்சன்
படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் முதல்படம் கோல மாவு கோகிலா காமெடிப்படம், இரண்டாவது படம் டாக்டர். காமெடி படமாக இருந்தாலும் கோவாவின் மிகப்பெரிய ட்ரக் டீலரை சாதாரண குடும்பம் ஜெயித்து காரியம் சாதிப்பது போல் ஒரு கூடை பூவை காதில் வைத்திருப்பார். இதில் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கம், அனிருத்தின் நண்பர் என்பதால் நெல்சனுக்கு வாய்ப்பு கிடைத்ததாக தகவல் வெளியானது.

சமூக வலைதளங்களில் எழும் விமர்சனம்
அப்படி என்ன பீஸ்ட் படத்தில் பிரச்சினை. ட்விட்டரில், சமூக வலைதளங்களில் வந்த கருத்துகள் பல விஷயங்களை சொல்கிறது. முதலில் மிகப்பெரிய நடிகர், மிகப்பெரிய நிறுவனம் கொடுத்த வாய்ப்பு குறுகிய கால இடைவெளி என்பதால் திரைக்கதையை தயார் செய்வதில் மெனக்கிடல் இல்லை. கதையில் வலு இல்லை, ஹீரோவுக்கு இணையாக வில்லன் இல்லை என்பது பெரிய மைனஸ் என்கிறார்கள்.

துப்பாக்கி ரா உளவாளி விஜய்தான் வேண்டும்
இதற்கு முன் வந்த காமெடிப்படமான கூர்க்கா படம் போல் ஷாப்பிங் மால் கான்செப்ட்டை எடுத்தது தவறில்லை, ஆனால் தீவிரவாதிகள் ஏதோ சுற்றுலா வந்தவர்கள் போல் பிணைக்கைதிகளை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதும், விஜய் அசகாய சூரத்தனம் செய்வதையும் விஜய் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. துப்பாக்கி படத்தில் விஜய் உயிர் போகும் சூழ்நிலையில் கைகள் கட்டப்பட்டு வில்லன் வித்யூத் ஜம்வாலிடம் சிக்கியிருப்பார்.

ஜீரணிக்க முடியாத காட்சிகள்
ஒரு நொடியில் மரணம் ஆனால் தனது சமயோசித்த புத்தியால் வில்லனை கொல்வார் விஜய். அதிலும் விஜய் ரா ஏஜண்ட் தான். இதுபோன்ற டஃபான ஒன்றைத்தான் விஜய் ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் ரா ஏஜண்ட் ஸ்னைப்பர் கன் வைத்து சண்டை போடுவதும், வேலைவிட்டு வந்து ஷாப்பிங் மால் செக்யூரிட்டியாக சேர்ந்து தீவிரவாதிகளை கொல்வதும், திடீரென விமானப்படை வீரர் போல் ஜெட் விமானத்தை இயக்குவதும், பாகிஸ்தானுக்குள்ளே செல்வதும் இப்போதுள்ள விஞ்ஞான தொழில் நுட்பம் அறிந்த ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அவெஞ்சர் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப்
ஹீரோவை, ஹீரோத்தனத்தை மிகைப்படுத்தி காட்டுகிறேன் என்கிற பேரால் 10 பேர் , 20 பேரை அடிப்பதில் தொடங்கி 100 பேர்வரை அடிப்பதும், மெஷின் கன் சண்டை, போர் விமானம் வரை அவெஞ்சர் ஹீரோ ரேஞ்சுக்கு காட்சிகள் வைப்பதையும் இயக்குநரின் இயலாமை என்று சொல்லி புறந்தள்ள முடியாது. ஒட்டுமொத்த யூனிட்டும், விஜய்யும் முழுப்பொறுப்பு. இதுபோன்ற கதைகளை பார்க்கும்போது இதை விஜய் அனுமதித்திருக்கக்கூடாது.

பந்தைய குதிரை விஜய்...கடற்கரையில் ஓட்டுவது நியாயமா?
பந்தயக் குதிரையான விஜய்க்கு கொடுக்க வேண்டிய பயிற்சியை கொடுக்காமல், அவருக்கேற்ற கதைக்களம், எதிர்புறம் வில்லன் ரோலில் வலுவான பாத்திரம் என அமைத்திருந்தால் கதை பேசியிருக்கும். ஆனால் பந்தைய குதிரையை கடற்கரை மணலில் ஓடவிட்டு காசு பார்த்தது போல் மிகப்பெரிய நடிகர் விஜய்யின் மாஸை வீணடித்துள்ளதாக எழும் விமர்சனத்தை மறுக்க முடியாதுதான்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications