வெயில் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடுவதில்லை.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
சென்னை: கோடை வெயில் கொளுத்துவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும், சட்டவிரோத பைக் பந்தயங்களை தடுக்க வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாய ஹெல்மெட் அணிவதை உறுதிபடுத்தவும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை உறுதிபடுத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தற்போது ஹெல்மெட் அணிவதில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நடந்த பைக் ரேஸில் இருவர் உயிரிழந்ததாகவும், அதில் வாகனத்தை ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும் கூறினார்கள். அப்போது சட்டவிரோத பைக் பந்தயங்களை தடுக்க வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது..
இதையடுத்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications