சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீக்ரெட்களை உடைத்த திருச்சி சூர்யா.. ஏத்துக்க முடியாது.. அண்ணாமலை அப்படி சொன்னாரா? என்ன நடக்குது?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்வதாக சமீபத்தில் திருச்சி சூர்யா தெரிவித்தார். பாஜக குறித்த பல சீக்ரெட்டுகளை உடைத்து வரும் இவரின் ராஜினாமாவை இன்னும் அண்ணாமலை ஏற்கவில்லை என்று பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு பாஜகவில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் திருச்சி சூர்யா. தொடர்பை மொத்தமாக துண்டித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறினார் திருச்சி சூர்யா.

பாஜகவில் இருக்கும் அதன் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோரை நேரடியாக குற்றஞ்சாட்டிவிட்டு திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து வெளியேறினார்.

அண்ணாமலைக்கு எதிராக 'லாபி’.. குடைச்சல் கொடுக்கும் மேலிட புள்ளி! 'அதே குரல்’ போட்டு உடைக்கும் சூர்யா! அண்ணாமலைக்கு எதிராக 'லாபி’.. குடைச்சல் கொடுக்கும் மேலிட புள்ளி! 'அதே குரல்’ போட்டு உடைக்கும் சூர்யா!

 திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா

இது தொடர்பாக திருச்சி சூர்யா செய்த ட்விட்டில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி, என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கவில்லை

ஏற்கவில்லை

இந்த நிலையில்தான் பாஜக குறித்த பல சீக்ரெட்டுகளை உடைத்து வரும் இவரின் ராஜினாமாவை இன்னும் அண்ணாமலை ஏற்கவில்லை என்று பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் ராஜினாமா கடிதம் அனுப்பியதை அண்ணாமலை ஏற்கவில்லை. கட்சியில் இருந்து நீங்கள் வெளியேறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியில் இருந்து நீங்கள் ராஜினாமா செய்ததை இன்னும் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை, என்று அண்ணாமலை திருச்சி சூர்யாவிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இப்போதும் அதிகாரபூர்வமாக திருச்சி சூர்யா பாஜகவில்தான் நீடிக்கிறார்.

சஸ்பென்ட்

சஸ்பென்ட்

பாஜகவில் உறுப்பினராக இருக்கும் திருச்சி சூர்யாவிற்கும் - டெய்சி சரணுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன் போனில் கடுமையான சண்டை நடந்தது . சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார். இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த அண்ணாமலை உத்தரவிட்டார்.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

ஆனால் அதற்கு முன்பாக ஆடியோவில் இருப்பது நான்தான் என்று சூர்யா ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். நாங்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம். நாங்கள் இருவரும் அக்கா - தம்பியாக தொடருவோம் என்று கூட்டாக பேட்டி கொடுத்தனர்.இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டதால் திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யாதான் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். ஆனால் கட்சியில் இருந்து வெளியேறியும் கூட இன்னும் இவரின் ராஜினாமாவை அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாஜக சீக்ரெட்

பாஜக சீக்ரெட்

பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை நேரடியாக திருச்சி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். திருச்சி சூர்யா வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு பாஜகவின் எதிர்காலம் அண்ணாமலைதான். அண்ணாமலைதான் அடுத்த தமிழ்நாடு முதல்வர். இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆகவும் வாய்ப்பு உள்ளவர் இவர்தான். இவர்தான் பாஜகவின் எதிர்காலம். இளம் வயதில் கட்சியில் மிகப்பெரிய தலைவராக அண்ணாமலை உருவெடுத்து இருக்கிறார். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றெல்லாம் திருச்சி சூர்யா பாராட்டி உள்ளார். ஆனால் போகிற போக்கில் முக்கியமான இரண்டு பெயரை மாட்டிவிட்டுள்ளார்.

அட்டாக்

அட்டாக்

எல் முருகன், கேசவ விநாயகம் ஆகியோரின் தலையீடு இல்லாமல் அண்ணாமலை சிறப்பாக செயல்படுவார். இவர்கள் நான் இல்லாமல் இனி சந்தோசமாக இருப்பார் என்று திருச்சி சூர்யா, எல் முருகன், கேசவ விநாயகம் மீது புகார்களை அடுக்கி உள்ளார். அதோடு நீங்கள் உங்கள் விளையாட்டுகளை காயத்திரி (LM) மற்றும் டெய்சி (KV) ஆகியோருடன் விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதாவது காயத்திரி பெயருக்கு பின் எல் முருகன் இனிஷியலையும், டெய்சி பெயருக்கு பின் கேசவ விநாயகம் இனிஷியலையும் போட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் திருச்சி சூர்யா. இப்படி வெளிப்படையாக சூர்யா கட்சி சீக்ரெட்டுகளை உடைக்கிறார். கட்சியில் நடக்கும் உட்கட்சி மோதல் பற்றி ஊடகங்களிலும் பேட்டி கொடுக்கிறார். ஆனாலும் இவரின் ராஜினாமாவை இன்னும் அண்ணாமலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சிக்கு எதிராக லேசாக சில புகார்களை வைத்ததற்கே காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் மத்திய இணை அமைச்சர், அமைப்பு பொதுச்செயலர்களுக்கு எதிராக பேசி இருக்கும் திருச்சி சூர்யாவின் ராஜினாமாவை அண்ணாமலை ஏற்றுகொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Why BJP Chief Annamalai has not accepted Trichy Surya resignation yet?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X