சீனியர் எண்ணத்தில்.. வெந்நீரை ஊற்றிய அண்ணாமலை.. யாத்திரைக்கு போனால் ஷாக்.. அலறிய "தாமரை"
சென்னை: அதிமுக கூட்டணி முறிவிற்கு பின் பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினாலும் அதற்கு பெரிய எழுச்சி இல்லை. தொடங்கிய போது இருந்த எழுச்சி இப்போது இல்லை, மறுபடியும் அந்த கூட்டத்தை கூட்ட வேண்டும், மறுபடியும் அந்த உற்சாகத்தை கூட்ட வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி முறிவிற்கு பின் யாத்தரையில் பிரேக் எடுத்த அண்ணாமலை அதை மீண்டும் தொடங்கி உள்ளார். இந்த நடைபயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், அதிமுக கூட்டணி முறிவிற்கு பின் பாத யாத்திரை மீண்டும் தொடங்கினாலும் அதற்கு பெரிய எழுச்சி இல்லை. தொடங்கிய போது இருந்த எழுச்சி இப்போது இல்லை, மறுபடியும் அந்த கூட்டத்தை கூட்ட வேண்டும், மறுபடியும் அந்த உற்சாகத்தை கூட்ட வேண்டும். ஆனால் அது எல்லாம் இருக்குமா என்று தெரியாது. முன்பு அண்ணாமலையிடம் இருந்த யாத்திரை மீதான ஆர்வம் இருக்குமா என்று தெரியாது. நிர்வாகிகளிடமும் அந்த ஆர்வம் இருக்கா என்று தெரியவில்லை. ஏனென்றால் அதிமுக கூட்டணியில் இருந்த போது வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை நிர்வாகிகளுக்கு இருந்தது .
( கோவையே நிமிர்ந்து நிற்குதே.. எடப்பாடி மிஸ் பண்ணதை கையில் எடுத்த ஸ்டாலின்.. ஏக குஷியில் மக்கள் )
நடைப்பயணத்தில் பணிகளை செய்தால் அதன்மூலம் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் வெற்றிபெறலாம் என்று நினைத்தனர். இப்போது அதிமுக இல்லாததால் தொண்டர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கலந்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. அதிமுக கூட்டணியை முறித்ததால் நமக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்ற அதிருப்தியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளனர். அதனால் நடைப்பயணத்திலும் அவர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. மேலே இருக்கும் நிர்வாகிகள் மட்டுமின்றி கீழே இருக்கும் நிர்வாகிகளும் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
அதனால்தான் நடைபயணம் உற்சாகம் இழந்து உள்ளது என்று நான் நினைக்கிறேன். பாஜக தொண்டர்கள் வெல்ல போவதில்லை என்ற வர்க்கத்தால் உற்சாகம் இழந்து உள்ளனர். தனியாக நிற்கிறோம் என்று உற்சாகம் பெற அவர்கள் நினைக்கலாம். ஆனால் தனியாக நின்று அவர்கள் வாங்கிய வாக்குகள் கடைசியாக 3 சதவிகிதம். அதன்பின் அவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கி பெரிதாக உயரவில்லை. கடைசி ஒரு வருடத்தில் வாக்கு வங்கி உயர்ந்துவிட்டது என்று கூற முடியாது. அதேபோல் அண்ணாமலை பேச்சுக்கள் மூலம் கட்சி வளர்ந்துவிட்டது என்றெல்லாம் கூற முடியும்.

கூட்டம் இருக்கா?: தொண்டர்கள் கூடுவது, கூட்டத்தை சேர்ப்பது, அண்ணாமலை பேச்சை வைத்து பாஜக வளர்ந்துவிட்டதாக சொல்ல முடியாது. அதனால் அதிமுக பாஜக ஒன்றாக இருந்தால் கூட்டணி வலுவாக இருக்கும் என்று சீனியர்கள் கருதுகிறார்கள். கொங்கு மண்டலம், தென் மண்டலத்தில் முயற்சி செய்யலாம். சில இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் அண்ணாமலை இப்போது கூட்டணியை முறித்துவிட்டார். கூட்டணி இல்லாமல் கொங்கு மண்டலத்தில், தென் மண்டலத்தில் வெற்றிபெறுவது கடினம்.
சீனியர்களின் எண்ணத்தில் அண்ணாமலை மண்ணை போட்டுள்ளார். இப்போது கூட்டணி முறிந்தது இன்னொரு பக்கம் தற்காலிகம் போல தெரிகிறது. எதிர்காலத்தில் இது மாறலாம். அவர்கள் கூட்டணி கூட வைக்கலாம். அண்ணாமலை உண்மையிலேயே கூட்டணி உடைத்தது உறுதி என்றால் அதை சிலர் ஆதரிக்கின்றனர். பலர் எதிர்க்கின்றனர். அண்ணாமலையின் முடிவை பலர் ஆதரிக்கவில்லை. லோக்சபா தேர்தலில் தனியாக நிற்பது சரியாக இருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications