சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசி நொடியில் நடந்த சம்பவம்.. 3 இடங்களுக்கு வேட்பாளரை அறிவிக்காத பாஜக.. வேறென்ன.. "அதேதான்" காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 17 தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் 3 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 20 இடங்களில் போட்டியிடுகிறது.

அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகள் வரை எதிர்பார்த்த நிலையில் 20 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

பாஜகவில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் லிஸ்ட்:

பாஜகவில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் லிஸ்ட்:

  • தனி தொகுதியான தாராபுரத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
    ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி
  • கோவை தெற்கு வானதி சீனிவாசன் போட்டி
  • காரைக்குடியில் எச் ராஜா போட்டி
  • அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி
  • நாகர்கோவில்- எம்.ஆர். காந்தி போட்டி
  • துறைமுகம் - வினோஜ் பி செல்வம்
  • திருவண்ணாமலை - எஸ். தங்கவேல்
  • திருக்கோயிலூர் - வாட். கலிவரதன்
  • மொடக்குறிச்சி - டாக்டர் சரஸ்வதி
  • திட்டக்குடி - பெரியசாமி
  • திருவையாறு - பூண்டி எஸ் வெங்கடேசன்
  • மதுரை கிழக்கு - டாக்டர் பி சரவணன்
  • விருதுநகர் - ஜி பாண்டுரங்கன்
  • ராமநாதபுரம் - குப்புராம்
  • திருநெல்வேலி - நாயனார் நாகேந்திரன்
  • கொளச்சல் - பி ரமேஷ்
அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

பாஜக மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் இன்னும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

  • விளவங்கோடு,
  • உதகமண்டலம்,
  • தளி
  • ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.

காரணம்

காரணம்

இந்த 3 தொகுதிகளில் போட்டியிட இரண்டு - மூன்று பாஜக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைகள் இங்கு போட்டியிடுகின்றன. இதனால் இங்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏன் ஆர்வம்

ஏன் ஆர்வம்

இந்த மூன்று தொகுதியில் எங்கும் திமுக போட்டியிடவில்லை. இதனால் இங்கு போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பாஜக நிர்வாகிகள் கருதுகிறார்கள். இதனால் இந்த தொகுதிக்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர். பாஜக அறிவித்துள்ள 17 தொகுதிகளில் 14 தொகுதிகள் திமுக போட்டியிடும் தொகுதிகள் ஆகும்.

  • விளவங்கோடு- காங்கிரஸ்
  • உதகமண்டலம் - காங்கிரஸ்
  • தளி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இதனால் இந்த தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக திணறி வருகிறது. பாஜகவின் முக்கிய புள்ளிகளுக்கு இடையிலேயே இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசரப்பட வேண்டாம் என்று பாஜக பொறுமையாக இந்த தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது.

English summary
Tamilnadu assembly elections: Why BJP didn't announce candidates for 3 constituencies?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X