அதெல்லாம் சரி.. பாஜக கேம்ப் இவ்வளவு அமைதியாக இருப்பது ஏன்? எக்சிட் போல் ஆதரவாக இருந்தும் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் கூறியும் கூட பாஜக டாப் தலைவர்கள் மௌனம் காத்து வருகிறார்கள்.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.

Lok Sabha election 2024 BJP Congress 2024

இந்த நிலையில் தற்போது 2024 லோக்சபா தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் உள்ளன. இந்த முறை மொத்தமாக பாஜகவின் என்டிஏ கூட்டணி 339-340 இடங்களை வெல்லலாம், அதாவது லேசான சறுக்கல் இருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. அதே சமயம் எதிர்க்கட்சி கூட்டணி 151-164 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மற்ற கட்சிகள் 15- 25 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக இருப்பதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு கணிப்பு: தமிழ்நாடு , புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன. 2024 லோக்சபா தேர்தல் நேற்று நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

சில கணிப்புகள்: உதாரணமாக நேற்று வெளியான சில கணிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இந்தியா செய்திகள்- டி-டைனமிக்ஸ் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 371 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 125 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 47 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

Jan Ki Baat கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 362-392 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 141 - 161 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 10-20 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

நியூஸ் 18 எக்ஸிட் போல் : தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி 36-39 சீட்களில் வெல்லும் என்று CNN நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது. பாஜக+ 1-3 சீட்களிலும், அதிமுக+ கூட்டணி 0-2 சீட்களிலும் வெல்லும்-நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது.

மௌனம் ஏன்?: ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் கூறியும் கூட பாஜக டாப் தலைவர்கள் மௌனம் காத்து வருகிறார்கள்.

இந்த எக்சிட் போல் தேர்தல் முடிவுகளை பொதுவாக பாஜக தலைவர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இதுவரை மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் என்று யாரும் இந்த முடிவுகளை வரவேற்று பேசவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் இதை வரவேற்றார். ஆனால் ஊடகம் ஒன்றில் பேசியதை தவிர வேறு எங்கும் பேசவில்லை.

மற்றபடி மற்ற பாஜக தலைவர்கள் எல்லோரும் தீவிரமாக அமைதி காக்கிறார்கள். மூன்றாவது முறை வெற்றிபெறுகிறோம் என்பதற்கான சுவடே இல்லாமல் பாஜகவினர் தீவிர மௌனம் காக்கிறார்கள்.

பாஜகவினர் இப்படி மௌனம் காப்பது ஏன் ? அதற்கு பின் உள்ள காரணம் என்ன? என்ற கேள்வி தேசிய அரசியலில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+