'மேன்-சைல்ட்' பிரச்சனையுடன் சுத்தும்.. தாடி வச்ச ஆட்கள்தான் ஹீரோவா? சினிமாக்களின் மோசமான நிலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் வெளியாகியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'தி பிரிண்ட்' ஊடகத்தில் இந்திய சினிமாக்களில் காட்சிப்படுத்தப்படும் ஹீரோக்கள் பற்றி முக்கியமான கட்டுரை ஒன்று வெளியாகி பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.

ஹர்ஷ் திவாரி எழுதியிருக்கும் இந்த கட்டுரை, ஒரு காலத்தில் சினிமா எப்படி இருந்தது.. அதன் ஹீரோக்கள் எப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் என்பதையும், தற்போதைய சினிமாக்கள் குறிப்பாக பான் இந்தியா திரைப்படங்கள் எப்படி மாறியிருக்கின்றன என்பதையும் விளக்குகிறது.

Bollywood

70-80களில் கதாநாயகன்

அப்போதைய திரைப்படங்களில் சண்டை காட்சிகள் இல்லையா? வன்முறைகள் இல்லையா? ஹீரோ யாரையும் அடிக்க மாட்டாரா? என்று கேள்வி எழலாம். அது எல்லாம் உண்மைதான். ஆனால்.. ஹீரோக்களின் கோபம் நியாயமானது. இதற்காக ஹர்ஷ் திவாரி, அமிதாப்பச்சன் நடிப்பில் 70,80களில் வெளியான தீவார், மர்த் போன்ற படங்களை மேற்கோள் காட்டுகிறார்.

பழைய படங்கள்

நம்மூர் படங்களை சொல்வதெனில்.. ரஜினியின் முள்ளும் மலரும் படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அந்த படத்தில் 'கெட்ட பையன் சார் இந்த காளி' என்கிற டயலாக் வரும். ரஜினி அடிதடியான.. வம்படியான ஆள்தான். ஆனால், காளியின் கோபம்.. ஊர் மக்களுக்கு சேவை செய்வதை தடுக்கும் முதலாளி (சரத்பாபு) மேல்தான் இருக்கும்.

சட்டத்தை மதிக்கும் ஹீரோக்கள்

இன்னொரு உதாரணம் சொல்வதெனில்.. கமல்ஹாசனின் 'வறுமையின் நிறம் சிவப்பு' திரைப்படத்தை சொல்லலாம். இதில் கமலின் கோபம்.. பசியையும், வறுமையையும் உருவாக்கும் சமூக அமைப்புக்கு எதிரானதாக இருக்கும். இன்னும் சமீபத்திய படத்தை சொல்வதெனில்.. விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படத்தை சொல்லலாம். ஊழலுக்கு எதிரான கோபம் காரணமாக விஜயகாந்த் சட்டத்தை கையில் எடுத்திருந்தாலும்.. அவர் அப்பாவி மக்களுக்கு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்த மாட்டார். கடைசியில் சட்டத்தை மதித்து தூக்கு தண்டனையை ஏற்றுக்கொள்வார்.

மோசமான படங்கள்

இப்போ அப்படியே சமீபத்திய படங்களை பார்ப்போம்.. 'அர்ஜூன் ரெட்டி' படம் பெரிய அளவில் நாடு முழுவதும் பேசப்பட்டிருந்தது. அந்த படத்தின் நாயகன் சரியான போதை கை. தான் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக சுற்றியிருப்பவர்களை துன்புறுத்தும் நபர். ஆனால் படிப்பில் டாப்பர் என்பதற்காக இவர் செய்யும் மோசமான விஷயங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என காட்டப்பட்டிருக்கும்.

பான் இந்தியா படங்கள்

அடுத்து 'அனிமல்' படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தந்தையிடம் இருந்து தனக்கு அன்பு கிடைக்கவில்லை என்பதற்காக தூப்பாக்கியை தூக்கிக்கொண்டு உலகத்தையே அழிக்க கிளம்பிவிடுகிறார் ஹீரோ. 'டாக்சிக்' படத்தின் கதையில்.. தனக்குரிய இடம் கிடைக்காததால் கோவாவை அழிக்க தாடி வைத்த ஹீரோ கிளம்பிவிடுவார். புஷ்பா, கேஜிஎஃப் எல்லாம்.. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று ஹர்ஷ் திவாரி கூறுகிறார்.

ஹீரோக்களின் மன நிலை

ஆக இந்த காலத்து ஹீரோக்களுக்கு 'மேன்-சைல்ட்' எனப்படும் பிரச்சனை இருக்கிறது. அவர்கள் குடும்ப பிரச்சனைகளுக்காக உலகத்தையே அழிக்க கிளம்பும் நபர்களாக இருக்கிறார்கள். சிறிய ஏமாற்றங்கள், காதல் தோல்வி, தந்தையுடன் கருத்து வேறுபாடுக்குக்கூட.. முதிர்ச்சி இல்லாமல் கோபப்படுவது, வன்முறையில் ஈடுபடுவது, குடி, பவுடர் போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துவது, துப்பாக்கியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவது என தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறார்கள்.

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட.. அவர்கள் சட்டத்திற்கு புறம்பானவர்களாக மாறிவிடுகிறார்கள் என்று பாலிவுட், பான் இந்தியா திரைப்படங்களை சாடியிருக்கிறார் ஹர்ஷ் திவாரி. நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே! கருத்துக்களை சொல்லுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+